சர்தார் பட வெற்றியை வேறு லெவலில் கொண்டாடிய கார்த்தி… பரிசுகளைப் பெற்ற மகிழ்ச்சியில் பட குழு…!

 பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு சர்தார் படத்தில் நடித்து மாபெரும் வெற்றியை அடைந்திருக்கிறார் நடிகர் கார்த்தி. இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சக்சஸ் பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.  அதில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

 2022 ஆம் ஆண்டு இவருக்கு ஒரு சூப்பர் ஆண்டாக இருந்தது என்று தான் கூற வேண்டும். தொடர்ந்து வெற்றியை அடுக்கடுக்காக தந்து கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் மூன்றும் ஹட்ரிக் வெற்றியை இவருக்கு தந்திருக்கிறது. இதனால் படு உற்சாகமாக தற்போது இருக்கிறார்.

மேலும் பொன்னியின் செல்வன் 500 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தாலும் அது கார்த்தியின் சோலோ வெற்றியல்ல. பலரும் இணைந்து பெற்றது. ஆனால் சர்தார் படம் அப்படியுள்ள சோலோ ஹீரோவாக நடித்து அக்டோபர் மாதம் தீபாவளி என்று திரைக்கு வந்த இந்த திரைப்படம் ஆனது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு போட்டியாக கருதப்பட்டது.

 இதில் ஆச்சரியத்தக்க விஷயம் என்றால் என்னவென்றால் பிரின்ஸ் படம் படுதோல்வியை தழுவியதால் இந்த வருட தீபாவளி ரேஷ்சில் ஜெயித்தது சர்தார் படம் தான். இந்தப் படத்தை பி எஸ் மித்திரன் இயக்க இந்த படத்தில் கார்த்தி தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

 மேலும் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதணை படைத்தது. இதனை அடுத்து இந்த படத்தின் வெற்றியை கொண்டாட சக்சஸ் பார்ட்டி ஒன்றை காட்டி கொடுத்திருக்கிறார். அதில் படகுழுக்கு அவர் அளித்த கிப்ட் தான் தற்போது கோலிவுட்டில் பேசும் பொருளாகி விட்டது.

 இதில் இவர் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தண்ணீர் பாட்டில்களை பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஸ்பெஷல் என்னவென்றால் அந்த பாட்டில் வெள்ளியால் ஆனதாம்.

 எனவே தற்போது இந்த விலை உயர்ந்த பரிசின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது அதுமட்டுமல்லாமல் உருப்படியான உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய இந்த பரிசை கொடுத்திருப்பதை பார்த்து அனைவரும் காட்டியை பாராட்டி வருகிறார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …