பட்டியலின மக்கள் குறித்து மோசமான பேச்சு.. சிக்கிய கார்த்திக் குமார் கொடுத்த பதிலை பாருங்க..

தற்போது இணையங்களில் விஸ்வரூபமாக பேசப்பட்டு வரும் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி விவகாரத்தை விட மிகவும் ஹாட் டாபிக்காக கோலிவுட் வட்டாரத்தை உலுக்கி வரும் விஷயம் பாடகி சுசித்ரா அளித்திருக்கும் பரபரப்பான பேட்டியில் தனது எக்ஸ் கணவர் கார்த்திக் குமார் பட்டியல் இன மக்களை இழிவாக பேசியது பற்றி கூறியிருந்தார்.

மேலும் இந்த பேட்டியில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் பற்றியும் அவரது கணவன் பற்றியும் விவகாரமான கருத்துக்களை முன்.வைத்து பேசி இருந்த பாடகி சுசித்ரா, இருவர் மேலும் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

பட்டியலின மக்கள் பற்றிய மோசமான பேச்சு..

இதனை அடுத்து பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் கார்த்திக் குமார் ஆடியோ ஒன்றை வெளியிட்டு அதற்கு உரிய விளக்கத்தை அளித்தது பரபரப்பாக இணையங்களில் வைரலாகி உள்ளது.

பாடகி சுசித்ரா ஆரம்ப காலத்தில் வானொலியில் ஆர்ஜே-வாக பணியாற்றியதை அடுத்து பின்னணி பாடகியாக பாடல்கள் பாட வாய்ப்பு கிடைத்ததை அடுத்து அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டவர்.

இந்நிலையில் இவர் 2016 ஆம் ஆண்டு அவரது ட்விட்டர் பக்கத்தில் திரையுலகப் பிரபலங்கள் பற்றிய தகவல்களையும் அவர்களது அந்தரங்க புகைப்படங்களையும் வரிசையாக வெளியிட்டு கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்திய விவகாரம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இந்த புகைப்படங்களை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிடக்கூடிய வகையில் செட்யூல் செய்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் அவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து வெளி வந்தது.

அந்த சமயத்தில் சுச்சி லீக்ஸ் என்று பெயரிடப்பட்ட புகைப்பட பகிர்வு நிகழ்வுக்கு முன்பு நடிகர் கார்த்திக் குமாரை பாடகி சுசித்ரா திருமணம் செய்து கொண்டதை அடுத்து சுசித்ராவிற்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக கணவர் கார்த்திக் கூறியிருந்தார். அது எந்த அளவுக்கு உண்மை என நிரூபணம் ஆகவில்லை.

பாடகி சுசித்ரா வெளியிட்ட சுச்சி லீக்ஸில் தனுஷ், நிக்கி கல்ராணி, அனிருத், அக்சரா ஹாசன் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களின் புகைப்படங்கள் இடம் பெற்று இருந்தது. இதனை அடுத்து எந்த விஷயம் பூதாகரமான சூழ்நிலையில் சுசித்ரா பற்றிய பேச்சுக்கள் அப்படியே அமுங்கி போனது.

சிக்கிய திரை பிரபலம் கார்த்திக் குமார்..

இந்த சூழ்நிலையில் பாடகி சுசித்ராவை கார்த்திக் குமார் விவாகரத்து செய்து விட சில நாட்களுக்கு முன்பு தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த சுசித்ரா தன் முன்னாள் கணவர் ஓரினச் சேர்க்கையாளர் என்ற பகீர் செய்தியை பகிர்ந்ததோடு தனுஷ் தான் அவருடைய பாட்னர் என்று மறைமுகமாக குறிப்பிட்டு இருந்தார்.

மேலும் சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் திரிஷா உள்ளிட்டோர் தான் புகைப்படங்களை பகிர்ந்தார்கள். அதற்காக தன்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட் கார்த்திக் தான் கொடுத்தார் என்று ஓபனாக பேசிய விஷயம் திரை உலகில் குட்டி சுனாமியை ஏற்படுத்தியது.

அந்த வகையில் பாடகி சுசித்ராவின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் கார்த்திக் குமார் தான் ஒரு தன் பாலின ஈர்ப்பாளர் என்றால் அதை சொல்வதற்கு எந்த வித தயக்கமும் இல்லை என்று பதிலடி கொடுத்ததும் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

இந்நிலையில் தற்போது வெளி வந்துள்ள ஆடியோ ஒன்றில் சுசித்ராவிடம் கார்த்திக் குமார் பேசுவதாக வெளி வந்த அந்த ஆடியோவில் கார்த்திக் குமார் பட்டியல் இன மக்களை தரக் குறைவாகவும், இழிவாகவும் பேசுவது போல இடம் பெற்றுள்ள வீடியோவானது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி கார்த்திக்கு எதிராக கடுமையான கண்டனத்தை பெற்று தந்துள்ளது.

சொன்ன பதில் தெரியுமா?

இந்த வீடியோவிற்கு பதில் அளித்து இருக்கக்கூடிய கார்த்திக் குமார் அந்த வீடியோவில் பேசப்பட்டு இருக்கும் குரல் தன்னுடைய குரல் அல்ல. மேலும் அது தான் பேசிய வார்த்தைகள் இல்லை. நான் அப்படி பேசவே இல்லை என்று கார்த்திக் குமார் பதில் அளித்திருக்கிறார்.

இந்நிலையில் இந்த வீடியோவில் கார்த்திக்குமார் பேசிய பேச்சினை கேட்டு பலரும் கார்த்திக் குமாருக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version