நவரச நாயகன் கார்த்திக் பார்த்த தில்லாலங்கடி வேலைகள்.. பிரபல நடிகர் போட்டு உடைத்த ரகசியம்..!

நடிகர்களில் பலர் இருந்தாலும், நடிக்க வந்தாலும் நாளடைவில் காணாமல் போனாலும் சில நடிகர்கள் எப்போதுமே ரசிகர்களின் மனங்களில் நிலைத்து நின்று விடுகின்றனர். அவர்கள் நடித்த பழைய படங்களை காண்பதற்காக, ரசிகர்கள் கூட்டம் திரண்டு தியேட்டர்களுக்கு வருகின்றனர்.

கார்த்திக்

இது எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களுக்கு மட்டுமல்ல, நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக்கு மிக முக்கியமாக பொருந்தும். தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு நடிகராக மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துபவர் நடிகர் முத்துராமன். அவரது மகன் தான் கார்த்திக்.

அலைகள் ஓய்வதில்லை

நடிகர் கார்த்திக் குறித்து, பிரபல நடிகர் மற்றும் பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது,

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ராதா. பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் இருவருமே மிகப்பெரிய உச்சங்களை தொட்ட நட்சத்திரங்களாக பிரகாசித்தனர்.

மாணவ பருவ காதல்

அலைகள் ஓய்வதில்லை படம், மாணவ பருவ காதலை மையப்படுத்தியது. இதில் தியாகராஜன் மனைவியாக நடித்த சில்க் ஸ்மிதா கேரக்டர் தனித்துவம் மிக்கதாக இருந்தது. இனிமேல் இதுபோன்ற நல்ல கேரக்டர்களில் நடி என புரட்சித் தலைவர் எம்ஜிஆரே, சில்க் ஸ்மிதாவுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார்.

கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்

இந்த படத்தில் நடித்த போதே கார்த்திக் – ராதா இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இருவரும் சினிமாவில் மட்டுமின்றி நிஜத்திலும் சில ஆண்டுகளாக காதலர்களாக இருந்திருக்கின்றனர். பின்னர் ஒரு கட்டத்தில் அது பிரேக்கப் ஆகியிருக்கிறது.

இதையும் படியுங்கள்: ஆசை 60 நாளு.. மோகம் 30 நாளு.. மில்க்கை புள்ளச்தாச்சி ஆக்கி.. தோழியுடன் டிமிக்கி கொடுத்த பாடி பில்டரு..

வலையில் விழச் செய்யும்

நடிகர் கார்த்திக்கை பொருத்தவரை தன்னுடன் நடிக்கும் நடிகைகளை வசப்படுத்தி விடுவார். அவரது அழகும், பேச்சும் அவரது வசீகர சிரிப்பும் எந்த நடிகையாக இருந்தாலும் அவரது வலையில் விழச் செய்துவிடும்.

தேடிப் போனது இல்லை

அதே போல் எந்த நடிகையையும் அவர் தேடிப்போனது இல்லை. பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு வந்தது இல்லை.ஏனென்றால் தானாகவே அவரிடம் விரும்பி வரும் நடிகைகள்தான் அதிகம்.

அதே போல் ஷூட்டிங் வருவதாக கூறிவிட்டு லாட்ஜ் ரூமிலேயே படுத்து தூங்கி விடுவார். இரண்டு நாட்கள் ஆனாலும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போக மாட்டார்.

பொள்ளாச்சியில் ஷூட்டிங் என்றால், கோயம்புத்தூருக்கு ரயிலில் சென்றுவிட்டு அங்கு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி விடுவார். பொள்ளாச்சிக்கு போகாமல், கோயம்புத்தூரிலேயே இருந்து விடுவார்.

சரியான நேரத்தில்

ஆனால் தன்னை ஏமாற்றும், கஷ்டப்படுத்தும் தயாரிப்பாளர்களை தான் அந்த மாதிரி கார்த்திக் சிரமப்படுத்துவாரே தவிர, தன்னை நம்பிய தயாரிப்பாளர்களுக்கு நல்ல விதமாக நடித்துக்கொடுப்பார். படப்பிடிப்புகளுக்கும் சரியான நேரத்தில் சென்றுவிடுவார்.

அதனால்தான் அவர் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றன. பல முக்கிய படங்களில் கார்த்திக் நடிக்கவும் முடிந்தது. இப்போதும் அவர் நடித்த படங்களை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

இதையும் படியுங்கள்: முக்கிய புள்ளியின் அரவணைப்பில் நடிகை சுகன்யா.. பல நாள் ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

பல படங்களில் நல்ல முறையில் நடித்தவர், பல படங்களில் நடிக்காமல் ஷூட்டிங் போகாமல் டிமிக்கி கொடுத்திருக்கிறார். அவருடன் நான் நடித்த ஒரு படத்திலேயே 2 நாட்கள் அவர், படப்பிடிப்புக்கே வரவில்லை.
இப்படி நவரச நாயகன் கார்த்திக் பல தில்லாலங்கடி வேலைகளை பார்த்தவர்தான் என, இந்த வீடியோவில் பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் பல ரகசியங்களை போட்டு உடைத்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version