இந்தியன் 2 குறித்து கார்த்திக் சுப்பராஜ் விமர்சனம்..! என்ன சொல்றாருன்னு பாருங்க..!

1996 இல் வெளியான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஷங்கர் கடந்த ஏழு வருடங்களாக இயக்கி வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

வெளியான முதல் நாள் முதல் காட்சி பெரும் ஆர்ப்பாட்டத்தை ஏற்படுத்தி துவங்கியிருந்தாலும் கூட அதற்குப் பிறகு இந்தியன் 2 திரைப்படம் குறித்து நிறைய எதிர்மறையான கருத்துக்கள் வர துவங்கியிருக்கின்றன. அதிகபட்சம் இந்த திரைப்படத்தை பார்க்க சென்ற பலரும் இந்தியன் படத்தின் முதல் பாகத்தோடு ஒப்பிட்டுதான் இந்தியன் 2 திரைப்படத்தை பார்த்திருக்கின்றனர்.

இந்தியன் 2 திரைப்படத்திற்கு வெளியீட்டுக்கு முன்பே அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஷங்கர் இயக்கிய சூப்பர் ஹிட் திரைப்படங்களில் முக்கியமான திரைப்படம் இந்தியன் எனும் பொழுது அதன் இரண்டாம் பாகம் எப்படியும் முதல் பாகத்தை தாண்டி இருக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.

இந்தியன் 2 ட்ரைலர்:

ஆனால் படத்தின் டிரைலர் வந்த பொழுதே அந்த எதிர்பார்ப்பு பாதி பேருக்கு குறைந்துவிட்டது. இந்தியன் படத்தின் முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகத்தின் ட்ரைலரே இல்லை என்று பேச்சுக்கள் இருந்து வந்தன. முக்கியமாக 100 வயதை கடந்த சேனாபதியின் சண்டை காட்சிகள் பலராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது.

இந்த நிலையில் பிரபல விமர்சகர்கள் பலருமே இந்த திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்களை கொடுக்கத் தொடங்கினர். இதற்கு நடுவே பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் இந்த படத்தை பங்கமாக கலாய்த்து மீம்களை எல்லாம் ஷேர் செய்து வந்தார்.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்காததால் ரஜினிகாந்த் தப்பித்து கொண்டார் என்றெல்லாம் பேசியிருப்பார் ப்ளூ சட்டை மாறன். ஏனெனில் இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் முதலில் நடிக்க வந்தது நடிகர் ரஜினிகாந்த்தான்.

பிறகு சில கால்ஷீட் பிரச்சினைகளால் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்தார். அதையெல்லாம் குறிப்பிட்டு கலாய்த்து வைத்திருந்தார் ப்ளூ சட்டை மாறன். இந்த நிலையில் தற்சமயம் பிரபல இளம் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் இந்த திரைப்படம் குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார்.

கார்த்திக் சுப்புராஜ் கருத்து:

அதில் அவர் கூறும்பொழுது இந்தியன் 2 படம் பார்த்தேன். படம் சூப்பராக இருக்கிறது. தான் நினைத்ததை திரையில் கொண்டு வர ஷங்கரை போல யாராலும் உயிரை கொடுத்து வேலை செய்ய முடியாது என்று மீண்டும் ஒருமுறை அவர் நிரூபித்து இருக்கிறார். அந்த விஷயத்தில் எப்போதுமே உத்வேகமாக உள்ளீர்கள் ஷங்கர் சார் என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

மேலும் ”உலகநாயகன் கமல்ஹாசன் சார் நடிப்பு எப்போதும் போல நெருப்பாக இருந்தது. குறிப்பாக இந்தியன் படத்தின் பழைய தீமுடன் சேனாபதி கதாபாத்திரத்தின் எண்ட்ரி வரும்பொழுது பார்க்கும் பொழுதே நாஸ்டாலஜிக்காக இருந்தது.

படத்தில் நடித்த எஸ்.ஜே சூர்யா கமல்ஹாசன் இருவருமே அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். அந்த நடிப்பு நம்மை பிரமிக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் உள்ளிட்ட பலருமே சிறப்பாக வேலை செய்துள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று கூறியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version