கார்த்திக்ராஜாவை இளையராஜா ஒதுக்கி வைத்தாரா வைரலாக பரவும் செய்தி

இசைஞானி இளையராஜாவிற்கு மூன்று குழந்தைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும் அதில் மூத்தவர் தான் கார்த்திக்ராஜா. இவரது தம்பி யுவன்சங்கர்ராஜா இவரும் ஓர் இசையமைப்பாளர் தான். சமீபத்தில்தான் இவர் தம்பி யுவன் மதம் மாறி திருமணம் செய்து கொண்டார். கார்திக்ராஜா 1992 ஆம் ஆண்டு வெளியான பாண்டியன் என்ற படத்தில் தன் தந்தையுடன் இணைந்து இசையமைத்திருந்தார்.

இதனை அடுத்து நாம் இருவர் நமக்கு இருவர், மாணிக்கம் போன்ற படங்களில் இவர் இசையமைத்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

 இதற்கு பின் டும்டும்டும், உள்ளம் கொள்ளை போகுதே போகுதே போன்ற படங்களில் இசை அமைத்து இருந்த போதும் தன் தந்தையைப் போல் இசைத் துறையில் பெரிய அளவில் சாதனை எதுவும் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் என்ன என்று அவர் கூறும்போது தனது தந்தை இசை பற்றிய நுணுக்கங்களை தனக்கு  கற்றுத் தரவில்லை என்று கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு கலைஞர்களை வைத்து இசை விழா நடத்தும் போது என்னை வைத்துதான் ஒத்திகை பார்ப்பார். அப்போது பல விதமான இசை நுட்பங்களை நானாகவே அவரிடமிருந்து கற்றிருக்கிறேன் ஒழிய அவர் தன்னிடமிருந்து எனக்காக எதையுமே கற்றுத் தரவில்லை.

இதற்காக பலமுறை நான் அவரிடம் சண்டை போட்டதோடு ஏன் நீங்கள் எனக்கு அந்த நுணுக்கத்தை கற்றுத் தரவில்லை என்று பலவிதமான கேள்விகளை கேட்டபோதும் நீ  தனியாக கற்றுக்கொள்ள வேண்டும் 

முதலில் அதன் பின் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னிடம் கேள்வி கேட்கலாம் என்று தான் பதில் அளிப்பார்.

அதுமட்டுமல்லாமல் உனது தம்பி யுவன்சங்கர் ராஜாவுக்கு கிடைத்திருக்கின்ற அங்கீகாரத்தை போல் உனக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்று நீ நினைக்கிறாயா உனக்குள்ளே என்பது போன்ற கேள்விகளை பலமுறை என்னிடம் கேட்டிருக்கிறார். இவற்றை எல்லாம் நான் ஒருபோதும் பெரிதாக  நினைத்ததில்லை.

பெரிய படங்கள் மிகப் பெரிய நடிகர்களுடன் நாம் வேலை செய்யும் போது தான் நமக்கு இன்னும் பல அறிவு வளர்ச்சி அடையும் என்று கூறுகிறார்கள். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கடவுள் மனது வைத்தால் எதுவும் நடக்கும் இப்போதும் நான் மிகவும் சந்தோஷமாகவே இருக்கிறேன் என்று கார்த்திக் ராஜா கூறுகிறார். 

ஒரு நல்ல சந்தர்ப்பத்திற்காக அவர் காத்துக் கொண்டிருப்பது அவரது பேச்சிலேயே தெரிகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …