“கருப்பு கவுனி அரிசி அல்வா..!” – சுடச்சுட சாப்பிட்டா சூப்பர் டேஸ்ட்..!

கருப்பு கவுனி அரிசி அல்வா:பலவிதமான அல்வாவை நாம் சுவைத்து சாப்பிட்டிருப்போம்.மேலும் பொதுவாகவே அல்வா என்றால் அது கோதுமையில் இருந்து தான் செய்யப்படும் என்று அனைவரும் நினைத்திருப்பார்கள். அதற்கு மாற்றாக இப்போது நமது பாரம்பரிய அரிசிகளில் ஒன்றான கருப்பு கவுனி அரிசியில் இருந்து அல்வா செய்யலாம். இந்த அல்வாவை தான் கருப்பு கவுனி அரிசி அல்வா என்று நாம் கூறுகிறோம்.

Kavuni Arisi Halwa

இதில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கும். இந்த கருப்பு கவுனி அரிசி அல்வாவை எப்படி செய்வது என்பதை பற்றி எந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

கருப்பு கவுனி அரிசி அல்வா செய்ய தேவையான பொருட்கள்

1.கருப்பு கவுனி அரிசி ஒரு கப்

2.தண்ணீர் மூன்று கப்

3.தேங்காய் பால் இரண்டு கப்

4.வெல்லம் ஒன்றரை கப்

5.ஏலக்காய் பொடி 2 டீஸ்பூன்

6.நெய் கால் லிட்டர்

7.முந்திரிப் பருப்பு 20

செய்முறை

முதலில் கருப்பு கவுனி அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொண்டு இரவு முழுவதும் நீரில் அப்படியே ஊற வைத்து விட வேண்டும். பிறகு மறுநாள் காலை இந்த அரிசியுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

Kavuni Arisi Halwa

பின்னர் நீங்கள் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வெல்வத்தைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் கரைந்து வரும் வேளையில் அதை எடுத்து வடிகட்டிய பிறகு மீண்டும் கடாயில் விட்டு பாகினை தயார் செய்து கொள்ளுங்கள்.

இந்தப் பாகானது ஒரு கம்பி பதம் வந்த பிறகு நீங்கள் அரைத்து வைத்திருக்கும் கவுனி அரிசியை இதனோடு சேர்த்து கட்டி சேராமல் இளம் தீயில் நன்கு கிளற வேண்டும்.

மேலும் இது லேசாக கெட்டியாகும் வரை நீங்கள் கிளறிக் கொண்டே இதனோடு தேங்காய் பால் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறுங்கள்.

Kavuni Arisi Halwa

அடுத்து கால் லிட்டர் நெய்யை சிறிது சிறிதாக இடைவெளியை விட்டு அல்வாவை கிளறும்போது இடையிடையே விட்டு நன்கு கிளறி வாருங்கள்.

அரை மணி நேரம் இதனை கிளறிக் கொண்டே இருங்கள். நெய் எல்லாம் பிரிந்து அல்வா கையில் ஒட்டாமல் வருவதுதான் சரியான பக்குவம். இந்த பக்குவத்துக்கு வந்த பிறகு நீங்கள் அடுப்பை அணைத்துவிட்டு முந்திரியை வறுத்து  அல்வாவில் போட்டு விடுங்கள்.

ஒரு சூப்பர் சுவையில் கவுனி அரிசி அல்வா தயார் நீங்களும் சுவைத்துப் பார்த்து உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கும் கொடுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …