என் உடம்பை அப்போது அவர் பாக்கலையா..? பிரபல இயக்குனர் மீது நடிகை கஸ்தூரி பகீர் புகார்..!

சினிமா துறை மட்டுமில்லாமல் ஏனைய துறைகளில் காலம் காலமாக பெண்களுக்கு ஆண்களால் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்படுகின்றது என்பதுதான் சமீப காலமாக பூதாகரமாக உருவெடுத்து இருக்கக்கூடிய விஷயம்.

குறிப்பாக சினிமா நடிகைகளுக்கு இப்படியான கொடுமைகள் அன்றாடம் அரங்கேறுகின்றன. சினிமாவில் எப்படியாவது நடித்து விட வேண்டும்.. பணம்.. புகழ்.. பெற்று செட்டிலாகி விட வேண்டும் என்று எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் சினிமாவிற்கு நடிக்க வரும் நடிகைகள் சினிமாவில் இருக்கும் ஒரு சில மோசமான நபர்களிடம் சிக்கி சீரழிந்து போகிறார்கள் என்று பலரும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ள தகவல் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. அப்போது அவர் என் உடம்பை பாக்கலையா..? இப்போதுதான் தெரிந்ததா..? என்று பிரபல இயக்குனரை விட்டு விளாசி இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை கஸ்தூரி நான் தமிழில் நடித்த இரண்டாவது படத்தின் இயக்குனர் என்னை படுக்கைக்கு அழைக்க முயற்சி செய்தார். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.

அவர் அப்படி பேச ஆரம்பிக்கும் போதே என்னிடம் அவர் என்னிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். எனக்கு தெளிவாக புரிந்தது. நான் ஒரு நிமிடம் கூட எதை பற்றியும் யோசிக்காமல் அந்த இடத்திலேயே அவரை மோசமாக திட்டி அவருடைய மானத்தை வெளுத்து வாங்கி விட்டேன்.

நான் அப்படி பேசியதை தொடர்ந்து என்னை அந்த படத்தில் இருந்து நீக்குவதற்கான காரணத்தை தேடிக் கொண்டிருந்தார். கடைசியாக நான் ஒல்லியாக இருக்கிறேன் என்று சொல்லி அந்த படத்தில் இருந்தே என்னை நீக்கி விட்டார்கள்.

இந்த காரணத்தை என்னிடம் சொன்னவுடன் நானும் என் உடன் இருந்தவர்களும் பலமாக சிரித்து விட்டோம். ஏனென்றால், ஆடிசன் நடக்கும்போதே அவரின் உடம்பை பார்த்து இருக்கிறார். நான் ஒல்லியாக தான் இருக்கிறேன் என்று அவருக்கு தெரியும்.

ஆடிஷன் நடக்கும் போது நாம் என்ன மாதிரியான தோற்றத்தில் இருக்கிறோம் என்பனவற்றை பார்த்து தான் ஒப்பந்தம் செய்வார்கள். அப்படி இருக்கும் பொழுது அவர் என்னை வேண்டுமென்றே படத்திலிருந்து தூக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு காரணத்தை தேடி பிடித்து சொன்னவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 

எனக்கு நடிக்க வரவில்லை.. ஒழுங்காக டான்ஸ் ஆட வரவில்லை.. என்று சொல்லி இருந்தால் சரி என்ன ஒப்புக்கொண்டு சென்றிருப்பேன். ஆனால் நான் ஒல்லியாக இருக்கிறேன் என்பதுதான் அந்த இயக்குனருக்கு பெரிய விஷயமாக தெரிந்திருக்கிறது.

அதுவும் படப்பிடிப்பின் முதல் ஷெட்யூல் முடிந்த பிறகு தான் அவருக்கு தெரிந்தது. அவர் என்னை படுக்கைக்கு அழைத்தா போது நான் அவரிடம் நடந்து கொண்ட விதத்தை நினைத்து அவரால் என்னை நிமிர்ந்து கூட பார்க்க முடியவில்லை என்பதுதான் இப்படத்தில் இருந்து நீக்கியதற்கு உண்மையான காரணம்.

அதனை என்னால் புரிந்து கொள்ளவும் முடிந்தது. என்னுடைய குடும்பத்தில் அனைவருமே நன்கு வசதி படைத்தவர்கள். அதிலும் என்னுடைய அம்மா ஒரு வக்கீல். இப்படி ஒரு வலுவான இடத்திலிருந்து வந்த எனக்கு இப்படியான கொடுமை நடந்தால் சினிமாவை வைத்து தான் சாப்பிட வேண்டும் சினிமாவை வைத்து தான் பிழைக்க வேண்டும் என்ற நிலையில் எந்த ஆதரவும் இல்லாமல் சினிமாவுக்கு வரும் பெண்களுக்கு என்ன நிலை..? என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள் என்று விரக்தியுடன் பேசி இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version