இதுக்கு 4500 ரூபாயா..? கடுப்பில் கஸ்தூரி..! விளாசும் நெட்டிசன்ஸ்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிஸியாக நடித்து, இப்போது நடிக்காவிட்டாலும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு சமூக வலைதளங்கள்தான் மிகப்பெரிய உதவி செய்து வருகின்றன.

அந்த வகையில் மாஜி ஹீரோயின்கள் பலரும், இப்போதும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்க உதவுவது சமூக வலைதளங்கள்தான்.

அடிக்கடி தங்களது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் தங்களை மறக்காத படி பார்த்துக் கொள்கின்றனர் சில நடிகைகள். ரசிகர்களுக்கும், நடிகைகளுக்கும் ஒரு பாலமாக சமூக வலைதளங்கள் இருந்து கொண்டிருக்கின்றன.

கஸ்தூரி

தமிழ் சினிமாவில் கஸ்தூரி, 1990 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர். தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகையாக வலம் வந்தவர் என்பது யாராலும் மறக்க முடியாது.

தாயம்மா

குறிப்பாக அமைதிப்படை படத்தில் அமாவாசையிடம் சிக்கி அல்வா தின்று ஏமாந்து போகும் அப்பாவி தாயம்மா கேரக்டரில் மிகச் சிறப்பான ஒரு நடிப்பை வழங்கியவர் நடிகை கஸ்தூரி.

அதன்பிறகு ஷங்கர் இயக்கிய இந்தியன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருப்பார். கஸ்தூரியை பொருத்தவரை பல படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி, தன்னை நல்ல நடிகை என்று பலராலும் பாராட்ட பெற்றவர்.

கஸ்தூரி, சென்னையில் பிறந்தவர். கடந்த 1992 ஆம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர் கஸ்தூரி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த 1974 ஆம் ஆண்டில் பிறந்த கஸ்தூரிக்கு, நாளைக்கு பிறந்தநாள், நடிகர் அஜீத்குமாரை போலவே, இவரும் மே 1ஆம் தேதி தான் அவர் பிறந்திருக்கிறார்.

மிஸ் சென்னை அழகி

அவர் மிஸ் சென்னை பட்டம் வென்றபோது அவருக்கு வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்பாகவே 1994 ஆம் ஆண்டில் வெளியான ஆத்தா உன் கோவிலிலே என்ற படத்தில் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த படம் வெளியான போது அவருக்கு வயது 17 தான்.

அன்று முதல் மலையாளம் கன்னடம் தெலுங்கு தமிழ் என பல படங்களில் நடித்திருக்கும் கஸ்தூரி, திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆனார். அதன் பிறகு ஏழு ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் 2001 ஆம் ஆண்டு முதல் மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு

குறிப்பாக தமிழ் படம் 2 படத்தில் குத்துவிளக்கு குத்துவிளக்கு சத்தியமா நான் குடும்ப குத்து விளக்கு என்ற பாடலில் செம கிளாமராக ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு நடித்திருந்தார்.

நடிகை கஸ்தூரி, அடிக்கடி தன் உணர்வுகளை வெளிப்படையாக கூறும் பண்பு கொண்டவர். அதனால் அவரது சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி சர்ச்சையான ஏதாவது சில கருத்துக்களை வெளியிட்டு, அதன் மூலம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இதனால் அடிக்கடி விமர்சனங்களிலும் சிக்கிக் கொள்கிறார்.

புதிதாக வாங்கிய செப்பல்ஸ்

இந்நிலையில் சமீபத்தில் புதிதாக வாங்கிய செருப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் கஸ்தூரி. காரில் பயணித்தபடியே அந்த வீடியோவில் அவர் பேசியிருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் கஸ்தூரி வெளியிட்ட அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

கிழிந்து விட்டது

ஒரு மாதத்துக்கு முன்பு 4500 ரூபாய் கொடுத்து இந்த பிராண்டட் செப்பல்ஸ் வாங்கியதாகவும், ஆனால் ஒரே மாதத்தில் அந்த செருப்புகள் சேதம் அடைந்து கிழிந்துவிட்டது என்றும், அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

தன்னிடம் உள்ள அதிக விலையுள்ள செருப்புகள் இதுதான் என்று கூறிய கஸ்தூரி, அந்த நிறுவனத்தை குறை கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதையா வாங்குனீங்க?

ஆனால் அதற்கு கமெண்ட் செய்துள்ள நெட்டிசன்கள், இதையா 4500 ரூபாய் கொடுத்து வாங்கினீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர், சிலர், ஆஃபரில் வாங்கினால் அப்படித்தான் இருக்கும் என்றும் கிண்டலடித்துள்ளனர்.

இப்போது அந்த வீடியோ பரபரப்பாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவில் ஏன் அப்படி மேக்கப் கூட இல்லாமல், கஸ்தூரி காட்சியளித்தார் என்றும் சில நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

பார்ப்பதற்கு சாதாரணமாக இந்த செப்பல்ஸ் விலை 4500 ரூபாயா..? கடுப்பில் கஸ்தூரி பேசியதை பார்த்து விளாசித் தள்ளிய நெட்டிசன்ஸ், பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version