அல்வாடா புஜ்ஜு என்ற ஒற்றை வார்த்தையில் நடிகர் சத்யராஜிடம் மயங்கிய தாயம்மா கதாபாத்திரத்தில் அமைதிப்படை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கஸ்தூரி.
ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பிறகு நடிகர்கள் விஜயகாந்த், பிரபு, பிரசாந்த் என அப்போதைய ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
ஆனாலும்கூட இவர் நடிப்பில் வெளியான அமைதிப்படை திரைப்படம் இவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது அதன் பிறகு இந்தியன் திரைப்படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகளாக சில நிமிட காட்சிகளில் நடித்து இருப்பார்.
ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமான இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகு ஆள் எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த இவர் சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மூலம் தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்துகிறார்.
அரசியல் மற்றும் சினிமா சார்ந்த பிரச்சனைகளுக்கு வெளிப்படையாக தன்னுடைய கருத்தை பதிவு செய்வதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கும் கஸ்தூரி சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருகிறார்.
எப்போதும் தன்னுடைய கருத்துக்களை மூடாமல் மறைக்காமல் வெளிப்படையாக எடுத்துவைக்கும் இவருடைய தைரியமான பேச்சுக்கு எனவே தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இருந்தாலும் தன்னுடைய கவர்ச்சியை விரும்பும் ரசிகர்களுக்காக அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும்.
இவர் இளம் நடிகர்களுக்கு சவால் விடும் விதமாக கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது. வயதானாலும் தன்னை கவர்ச்சியாகவே உணரும் நடிகை கஸ்தூரிக்கு வயது ஆகவில்லை என்று வர்ணிக்கிறார்கள் ரசிகர்கள்.
சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடித்த தமிழ்நாடு பிரீமியர் லீக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்ற கஸ்தூரி விதவிதமான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.