“அப்போ.. நீங்க எதை குடிப்பீங்க..” என்று கேட்ட நெட்டிசன்.. கஸ்தூரி கொடுத்த பதிலை பாருங்க..

தமிழ் சினிமாவில் நடித்த பல நடிகைகள், வாய்ப்பு கிடைக்கும் வரை நடித்து கல்லா கட்டுவார்கள். ஒரு கட்டத்துக்கு பிறகு நடிப்புக்கு போதிய வாய்ப்பு இல்லை என்றால், கவர்ச்சி காட்டி சில ஆண்டுகள் தாக்கு பிடிப்பார்கள்.

அதற்கு மேலும் வண்டி ஓடவில்லை என்றால், சீரியல் பக்கம் செல்வார்கள். இல்லை என்றால், கோடீஸ்வர தொழில் அதிபராக பார்த்து திருமணமாகி செட்டிலாகி விடுவார்கள்.

இதுதான் சினிமா நடிகையர் பலரது வாழ்க்கையாக இருக்கிறது. இன்னும் சில நடிகைகள் தன்னுடன் நடித்த நடிகரையோ அல்லது தனக்கு பிடித்த இயக்குனரையோ திருமணம் செய்வார்கள்.

குடும்பம் நடத்தும் நடிகைகள்

இதில் அந்த நடிகர், அல்லது அந்த இயக்குநர் என தொடர்ந்து அவர்களுடன் குடும்பம் நடத்தும் நடிகைகள் உண்டு. சில நடிகைகள் சில ஆண்டுகளில் தன் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விடுவார்கள். விவாகரத்து பெறுவார்கள்.

மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்து அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடிப்பார்கள். அல்லது வாய்ப்பிருந்தால் வேறு திருமணம் செய்து கொள்வார்கள்.

கஸ்தூரி

நடிகை கஸ்தூரி, தமிழ் சினிமாவில் பல நல்ல படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்தவர். கஸ்தூரி கடந்த 1992ம் ஆண்டில் மிஸ் மெட்ராஸ் அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.

இதையும் படியுங்கள்: “பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..!

ஆத்தா உன் கோயிலிலே என்ற படத்தில் கஸ்தூரி அறிமுகமானார். சின்னவர், செந்தமிழ்பாட்டு, அமைதிப்படை, இந்தியன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடந்த 2019ம் ஆண்டில் விஜய் டிவியில் நடத்தப்பட்ட பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

கஸ்தூரி நடித்த படங்களில் குறிப்பாக இந்தியன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருப்பார். அதுபோல் மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை படத்தில், சத்யராஜ் காதலியாக நடித்திருப்பார்.

குடும்ப குத்துவிளக்கு

சமீபத்தில் குத்துவிளக்கு, குத்துவிளக்கு சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு என்ற ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டமும் போட்டிருந்தார்.

கடந்த பல ஆண்டுகளாக சினிமாவில் போதிய வாய்ப்புகளின்றி உள்ள நடிகை கஸ்தூரி சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கிறார். அதிமுக, திமுக, பாஜக என கட்சி சார்ந்தவர்களை, அரசியல்வாதிகளை, முக்கிய அரசியல் அறிக்கைகளை விமர்சனம் செய்கிறார்.

சினிமா சார்ந்த விஷயங்களிலும் அவரது கருத்துகளை தனது வலைதள பக்கங்களில் தைரியமாக பதிவிடுகிறார். பொது இடங்களிலும் அரசியல், பொருளாதாரம், சினிமா குறித்த தனது கடுமையான குற்றச்சாட்டுகளை, விமர்சனங்களை முன்வைக்கிறார்.

திராவிடியம்

அந்த வகையில், சமீபத்தில் நடிகை கஸ்தூரி தனது X பக்கத்தில் செய்துள்ள பதிவு, வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்: அம்பானி வீட்டு கல்யாணத்தில் ஆட்டம் போட்ட ரிஹானாவின் சொத்து மதிப்பு தெரிஞ்சா.. தூக்கி வாரிப்போடும்..

அதில் திராவிடியம் என்றால் களவாணித்தனம் என கஸ்தூரி பதிவிடுகிறார். அதற்கு ஒருவர், லீலா பேலஸ் என்றால் ஓசி குடி என்று பதில் பதிவிடுகிறார். இதற்கு பதிலளித்த கஸ்தூரி, இதுவும் பச்சை திராவிடிய பொய். நான் என்றுமே மது அருந்துவதில்லை என்று பதில் தருகிறார்.

எதை குடிப்பீங்க

அதற்கு ஒருவர், அப்போ எதை குடிப்பீங்க என்று கேட்க, நீர் மோர், பழரசம் என கஸ்தூரி பதில் பதிவிட்டுள்ளார். அது இப்போது வைலராகி வருகிறது.

“அப்போ.. நீங்க எதை குடிப்பீங்க..” என்று கேட்ட நெட்டிசனுக்கு நீர் மோர், பழரசம் என நக்கலாக கஸ்தூரி கொடுத்த பதிலடியை பலரும் ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam