“அமைதிப்படை அல்வா சீனில் சத்யராஜ் என்னிடம்..” பரபரப்பை கிளப்பிய கஸ்தூரி..

90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கஸ்தூரி.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களையும் நடித்திருக்கிறார்.

1992 இல் மிஸ் மெட்ராஸ் என்று அழகி போட்டியில் கலந்துகொண்டு பட்டத்தை வென்றிருக்கிறார். அதன் பின்னர் அவருக்கு திரைப்படங்களில் இருந்து வாய்ப்புகள் மளமளவென குவிந்தது.

ஆத்தா உன் கோவிலிலே ராசாத்தி ஒரு நாள் சின்னவர் அமைதிப்படை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: இந்த படத்தின் கதைக்காக.. வரம்பை மீறி இதை பண்ணேன்.. குண்டை தூக்கி போட்ட கயல் ஆனந்தி.!

இதனிடையே பின்னர் காலங்கள் செல்ல செல்ல கஸ்தூரி கவர்ச்சியான நூல்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கவர்ச்சியான கதாபாத்திரங்களின் நடித்து அவருக்கு பீல்ட் அவுட் ஆகிவிட்டார்.

இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் டச்சில் இருந்து வரும் கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு போட்டியாளராக புகழ் பெற்றார்.

நயன்தாரா கட்டிப்பிடிக்கணும் சத்யராஜ் சர்ச்சை பேச்சு:

இதனிடையே அவர் அரசியல் குறித்தும் சினிமா குறித்தும் சமூகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்கள் குறித்தும் தனது கருத்தினை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். இதனாலே அவர் ட்விட்டர் கஸ்தூரி என அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தற்போது சொல்லவதும் தகவல் என்னவென்றால் நடிகைகளுக்கு திரைத்துறையில் பல பிரச்சனைகள் இருக்கிறது என வெளிப்படையாக கூறி வருகிறார்.

அப்படிதான் திரிஷாவை குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

அதே போல் நடிகர் சத்யராஜ் நயன்தாரா குறித்து பேசியது தற்ப்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதாவது ஹீரோயின்களுக்கு அப்பாவாக நடிக்கும் போது அந்த நடிகைகள் அப்பாவை கட்டிப்பிடித்து அழும்படியான காட்சிகள் வைக்க வேண்டும் என கூறி இருந்தார்.

சத்யராஜ் காமெடியாக சொன்ன இந்த விஷயத்தை அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட் நடிகை நயன்தாராவே கைதட்டி ரசித்தார்.

இதையும் படியுங்கள்: இந்த காரணத்திற்காக விஜய்யுடன் நடிக்க ஆசையா இருக்கு.. விருமாண்டி அபிராமி சொல்வதை கேட்டீங்களா..?

அந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அதனை நெட்டிசன் ஒருவர் நடிகை கஸ்தூரியை டேக் செய்து,

கஸ்தூரியிடம் எல்லைமீறினாரா சத்யராஜ்?

நீங்கள் சத்யராஜ் உடன் அமைதிப்படை படத்தில் அல்வா சீனில் நடித்தபோது அவர் அத்துமீறி இருப்பது போல் தோன்றுகிறது. இதுபற்றி நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் என கூறி இருந்தார்.

அதறகு பதிலளித்த கஸ்தூரி, சத்யராஜ் ரொம்ப நல்லவர். அந்த அல்வா சீன் எனக்கு நியாபகம் இருக்கிறது. அந்த சீனில் நான் அசெளகரியமாக இருப்பதை அறிந்து ஜாக்கிரதையாக நடித்திருந்தார்.

அந்த காட்சியை மட்டும் படமாக்க 4 மணிநேரம் ஆனது. நாங்கள் இதை வெறும் நடிப்பாகவே பார்த்தோம். அந்த சீன் எடுக்கும்போது என் அம்மாவும் கூட இருந்தார்.

இதையும் படியுங்கள்: அந்த ரூம்ல நடந்ததை நயன்தாரா இன்னும் மறக்கவில்லை.. சீக்ரெட் உடைத்த நடிகை..

அந்த காட்சியில் சத்யராஜ் சார் டயலாக் மெருகேற்றிய விதத்தை பார்த்து என் அம்மாவே ஆச்சர்யப்பட்டார். பார்ப்பதற்கு தான் அப்படி தெரியும் ஆனால், உண்மையிலே அவர் மோசமாக நடந்துகொள்ளவில்லை.

அமைதிப்படை படத்தில் சத்யராஜ் உடன் நடித்தது ஒரு மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. அல்வா சீன் உள்பட அந்த படத்தில் நடித்த ஒவ்வொரு சீனையும் நினைத்து நான் பெருமைகொள்கிறேன்” என்றார் கஸ்தூரி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version