கமல்ஹாசன் போதை பொருள் சப்ளை.. சுசித்ராவின் பேச்சுக்கு.. கஸ்தூரி பதில்..!

தற்போது கடந்த இரண்டு மூன்று வாரங்களாக பாடகி சுசித்ராவின் சுச்சி லீக்ஸ் விவகாரம் பெருமளவு பேசப்பட்டு விஸ்வரூபமாகி வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அந்த வகையில் இவர் கமலஹாசனை பற்றி கடுமையான தாக்குதல்களையும் அவர் போதைப் பொருள் சப்ளை செய்வதாக கூறிய விஷயம் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனை அடுத்து இந்த விஷயத்திற்கு பதிலடி தரக் கூடிய வகையில் நடிகை கஸ்தூரி பேசிய விஷயத்தைப் பற்றி இந்த பதிவில் விரிவாக படிக்க தெரிந்து கொள்ளலாம்.

கமல் போதை பொருள் சப்ளை செய்தாரா..

திரைப்படங்கள் வெற்றி பெற்றாலோ திரை உலகில் பிரபலங்களாக இருக்கும் நபர்களின் பிறந்த நாள் திருமண நாள் போன்றவற்றிற்கு பார்ட்டிகளை வைத்து தன்னுடன் பணியாற்றும் நடிகர் மற்றும் நடிகைகளை அழைப்பது வழக்கம்.

அதிலும் இரவு நேர பார்ட்டி என்றால் திரை உலகில் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. மதுவுக்கும் மாதுவுக்கும் பஞ்சம் இல்லாமல் அந்தப் பார்ட்டி கலைக்கட்டும்.

அந்த வகையில் கமலஹாசன் தன் வீட்டில் பார்ட்டி கொண்டாடும் போது கொக்கைன் எனும் போதை வஸ்துவை பயன்படுத்துவதாக பாடகி சுசித்ரா பேசியிருப்பது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சமுதாயத்தில் தனக்கு என்று ஓர் அந்தஸ்தில் இருக்கும் நடிகர் கமலஹாசன் உலகநாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக் கூடியவர். இது போன்ற செயல்களில் ஈடுபடுவாரா? என்ற கேள்வியை கிளப்பி உள்ளது.

சுசித்ராவின் பேச்சுக்கு..

இந்நிலையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தம் இருப்பதாக திரையுலக தயாரிப்பாளர் சாதிக்கை கைது செய்ததை அடுத்து ரசிகர்களின் மனநிலை மட்டுமல்லாமல் அவர்கள் சிந்திக்கின்ற கோணமும் வேறு விதமாக மாறி உள்ளது.

இந்நிலையில் பாடகி சுசித்ரா கமல் வைக்கும் பார்ட்டிகளில் நடிகர் நடிகைகளுக்கு போதை பொருள் தருவதாக சொல்லப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டை அடுத்து கமலுக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரி பதிலளித்திருக்கிறார்.

கஸ்தூரி பதிலடி..

அந்த பதிலில் அவர் கமலை புகழ்ந்து பேசி இருப்பதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொருவரது வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள செல்லும் போது போதை வஸ்துவை கலந்து கொள்ள இருப்பவர்கள் ஏன் கொண்டு செல்ல மாட்டார்கள்.

மேலும் பார்ட்டியை ஏற்பாடு செய்தவர்கள் தான் தருவார்களா? யாரும் யோசிக்க மாட்டார்களா? என்பது போன்ற சந்தேக கேள்விகளை கிளப்பி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் கமலஹாசன் வீட்டில் நடக்கும் பார்ட்டிகளில்  போதை பொருள் பயன்படுத்துவது பற்றி சுசித்ரா பேசியதை மறுத்து சொல்லி இருக்கும் இவர் அது போல நடக்க வாய்ப்பில்லை என்பதை சொல்லி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தனக்கு குடிக்கும் பழக்கமோ போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கமோ இல்லாததால் தனது நண்பர்கள் அதாவது நடிகர் மற்றும் நடிகைகள் பார்ட்டிக்கு செல்லக் கூடியவர்களை பாங்காக இரவு இரண்டு மணிக்கு அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கும் பொறுப்பு தன்னுடையது என்பதை சொல்லி இருக்கிறார்.

இதற்கு காரணம் கடுமையான போதையில் இருக்கும் அவர்களை இது போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தாமல் நான் தெளிவாக இருப்பதால் அவர்கள் வீட்டுக்கு கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டு இருந்ததாக பேட்டியில் தெரிவித்து இணையத்தில் வைரலாக்கி விட்டார்.

மேலும் இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாகி இருப்பதோடு மட்டுமல்லாமல் சுபித்ராவின் பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பதிலடி தந்து கமலஹாசனுக்கு வக்காலத்து வாங்கி இருப்பதாக சொல்லி இருக்கிறார்கள்.

எனினும் இதில் எந்த அளவு உண்மை உள்ளது எப்படி அடிக்கடி பிரபலங்களின் மீது சுபித்ரா கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவது எதனால் என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் எப்போது கிடைக்கும் என்பதையும் கேட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version