போதை நடிகைகளுக்கு… நான் தான் நைட்டு 2 மணிக்கு இதை பண்ணுவேன்.. ஓப்பனாக கூறிய கஸ்தூரி..!

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழி திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகை கஸ்தூரி 1992-ஆம் ஆண்டு மிஸ் மெட்ராஸ் அழகிப் போட்டியில் பட்டம் பெற்றவர்.

பன்னிரண்டாம் வகுப்பு வரை சென்னையில் படிப்பை முடித்த இவர் 12 ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவி என்பது பலருக்கும் தெரியாது.

நடிகை கஸ்தூரி..

நடிகை கஸ்தூரி 1991-ஆம் ஆண்டு இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே என்ற திரைப்படத்தின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து அதே ஆண்டு சக்கரவர்த்தி என்ற மலையாள திரைப்படத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டார்.

மேலும் தமிழில் இவர் சின்னவர், செந்தமிழ் பாட்டு, புதுமுகம், அமைதிப்படை போன்ற படங்களில் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்திய இவர் 30 நிமிட குறும்படத்தையும் இயக்க இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பாடகி சுசித்ரா மூலம் பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் மீது எழுந்திருக்கும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் பற்றி இணையங்கள் ஒவ்வொன்றும் தினம் தினம் சுடச்சுட செய்திகளை வெளியிட்டு வருகிறது.

போதை நடிகைகளுக்கு..

அந்த வகையில் நடிகை கஸ்தூரி சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும் போது பாடகி நடிகர் கமலஹாசனின் மீது வைத்திருந்த போதைப் பொருள் குற்ற சாட்டை மறுத்து பேசி இருக்கிறார்.

மேலும் அது குறித்து அவர் கூறியதாவது பாடகி சுசித்ரா கமலஹாசன் போதைப்பொருள் சப்ளை செய்கிறார் என்று கூறுகிறார். மேலும் அவருடைய விருந்துகளில் போதைப்பொருள் புழங்கிகிறது என்று கூறி இருக்கிறார்.

இதற்கு கமல்ஹாசன் எப்படி காரணமாக முடியும். இப்போது நீங்கள் ஒரு விருந்து வைக்கிறீர்கள், அந்த விருந்திற்கு வரக்கூடிய உங்களுடைய விருந்தினர்கள் போதை பொருளை எடுத்து வரலாம். அங்கு வந்து அதனை பயன்படுத்தலாம். அதனால் நீங்கள் தான் அந்த போதை பொருளை விநியோகம் செய்தீர்கள் என்று ஆகிவிடுமா?

எனவே எப்படி கமல்ஹாசன் மீது போதை பொருள் விநியோக குற்றச்சாட்டை வைக்க முடியும். நான் ஒரு நடிகை என்ற முறையில் இரவு விருந்துகளில் என்ன நடக்கும் என்று கூறுகிறேன். அதற்கு முன்பு ஒரு விஷயத்தை உறுதிப்படுத்திக் கொள்கிறேன்.

நைட் 2 மணிக்கு இத பண்ணுவேன்..

எனக்கு போதை பழக்கம் கிடையாது. எந்த வகையான போதை பழக்கத்திற்கும் நான் ஆளாகவில்லை. ஆனால் பல விருந்துகளில் கலந்து கொண்டிருக்கிறேன்.அத்துடன் என்னுடைய நண்பர்கள் விருந்துகளில் கலந்து கொள்வார்கள்.

அப்போது எனக்கு என்ன வேலை என்றால் அப்படி பார்ட்டிகளில் கலந்து கொண்டு போதை ஆகிவிடும் என்னுடைய நண்பர்கள் ஆன நடிகர், நடிகைகளை நான் தான் இரண்டு மணிக்கு அவர்களை அவர்களுடைய வீட்டில் பத்திரமாக சேர்க்கும் வேலையை செய்பவள்.

ஏனென்றால் நான் போதைப் பழக்கத்திற்கு ஆளானது கிடையாது. அதனால் நான் தெளிவாக இருப்பேன்.எனவே தான் போதையில் இருக்கும் நடிகைகளை அவர்களுடைய வீட்டில் பத்திரமாக சேர்க்கும் வேலை என்னுடையது இந்த வேலையைத் தான் எனக்கு கொடுப்பார்கள் என கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு இரவு 2 மணிக்கு போதையில் இருக்கும் நடிகர் நடிகர்களை கொண்டு சேர்க்கும் வேலையைத்தான் நடிகை கஸ்தூரி செய்கிறாரா என்று பங்கமாக கலாய்த்து இருப்பதோடு விஷயத்தை வைரலாக மாற்றியும் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version