யாரை மறைமுகமாக தாக்கினார் கஸ்தூரி… கொதிப்பில் ரசிகர்கள்!

1991 இல் இயக்குனர் கஸ்தூரிராஜா இயக்கிய ஆத்தா உன் கோயிலிலே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கஸ்தூரி.

1992 இல் மிஸ் மெட்ராஸ் என்னும் பட்டத்தையும் வென்றவர். தமிழில் அறிமுகமானதை தொடர்ந்து மலையாளம் தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தியா ஆகிய மொழிகளிலும் பல படங்களை நடித்துள்ளார்.

அவர் நடித்ததில் குறிப்பிடத்தக்க படங்கள் ஆன சின்னவர், அமைதிப்படை, ராசாத்தி வரும் நாள், செந்தமிழ் பாட்டு, ராக்காயி கோயில், சுயம்வரம், அன்னமய்யா போன்றவை.

திரைத்துறையிலிருந்து சிறிது காலம் விலகி இருந்த கஸ்தூரி ‘தி பைபாஸ்’ என்னும் இந்தி குறும்படத்திலும்,  படத்தின் வாயிலாகம் 2010ல் மீண்டும் நடிக்கத் தொடங்கினார். மேலும் 2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.

தமிழர்களின் வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பல சர்ச்சைகளும் பலவாரியாக சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

இப்படம் குறித்து பல நடிகர், நடிகைகளும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள். மேலும் அரசியல் பிரமுகர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

இப்படம் குறித்து பல வதந்திகள் பரவி வந்தாலும் படம் வெற்றிகரமாக வசூல் வேட்டை செய்து கொண்டிருக்கிறது.இப்படத்தில் ராஜராஜ சோழன் தமிழனா என்ற என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சரித்திர கால திரைப்படம் ஒன்றை இயக்கம் போது இவ்வாறான சர்ச்சைகள் கிளம்புவது சகஜம் என்று திரைப்பட  குழுவினர் தெரிவிக்கிறார்கள்.

தற்போது மேலும் ஒரு சர்ச்சையாக நடிகை கஸ்தூரி மறைமுகமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தாக்கி தனது வலைதள பக்கத்தில் ஒரு செய்தியை பதிவிட்டுள்ளார். அச்செய்தியானது, ஆடம்பரமான விருந்து …ரகரக உணவு …. ஆனால் ஏனோ ருசிக்கவில்லை… ரசிக்க இயலவில்லை.

ஆடம்பர  இசை …. எத்தனையோ வாத்தியங்கள்…. ஒன்றில் கூட  தமிழில்லை. அதனால் ஒட்ட முடியவில்லை. என்பதாகும்.இப்பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள் சிலரின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டாலும் பல ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …