“பெண்களை இப்படி பாத்தா உனக்கு அது வந்துடுமா..?..” நடிகை கஸ்தூரி தடாலடி பதில்.. என்ன காரணம்…?

தமிழ் சினிமாவில் 1990களில் அறிமுகமான நடிகைகளில் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்தவர்களில் ஒருவர் கஸ்தூரி. அவர் 1992ம் ஆண்டில் மிஸ் மெட்ராஸ் அழகி பட்டம் வென்றவர். மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தார்.

கஸ்தூரி

ஆத்தா உன் கோயிலிலே படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.

அமைதிப்படை படத்தில் சத்யராஜ் காதலியாக தாயம்மா கேரக்டரில் கஸ்தூரி வாழ்ந்திருப்பார். இந்த படம்தான் இயக்குநர் மணிவண்ணனுக்கும், நடிகர் சத்யராஜூக்கும் அவர்களது சினிமா பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை படமாக அமைந்தது.

இந்தியன் படத்தில்

இந்தியன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்திருப்பார். இவர் மின்சாரம் தாக்கி இறக்கும் போது, லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகளால்தான் சேனாபதி, இந்தியனாக மாறுவார்.

செந்தமிழ் பாட்டு, சின்னவர், உடன்பிறப்பு போன்ற பல படங்களில் நடித்தார் கஸ்தூரி. தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் கஸ்தூரி நடித்தார்.

சாதாரண நடிகையாக…

ஆனால் எந்த மொழியிலும் கஸ்தூரி சாதாரண நடிகையாக, பிரபலமாக இருந்தாரே தவிர முன்னணி நடிகையாக பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

கடைசியாக, குத்துவிளக்கு, குத்துவிளக்கு சத்தியமா நான் குடும்ப குத்துவிளக்கு என ஐட்டம் பாட்டுக்கு கூட குத்தாட்டம் போட்டு பார்த்து விட்டார்.

இதையும் படியுங்கள்: சூர்யாவை நா ஒருநாளும் அப்படி கூப்ட்டது இல்ல.. பல நாள் ரகசியம் உடைத்த ஐஸ்வர்யா..!

பிக்பாஸ்

எனினும் தமிழில் அஜீத், விஜய் போன்ற முன்ணி நாயகர்களுடன் ஜோடி சேர முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் பங்கேற்றார்.

கடந்த பல ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் நடிகை கஸ்தூரி சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த விஷயங்கள் குறித்து பொதுவெளியில் பேசுகிறார். தனது கருத்துகளை பதிவிடுகிறார்.

பதிலடி கொடுக்கிறார்

நடிகைகள் குறித்த சர்ச்சையான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கிறார். அதே போல் அரசியல்வாதிகள் நடிகைகள் குறித்து தவறாக பேசினாலும், அதற்கான மறுப்பும், கண்டனமும் தெரிவிக்கிறார்.

மத்திய அரசு, மாநில அரசு திட்டங்கள், அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள், குறைகள் என எதைப்பற்றி வேண்டுமானாலும் தனது விமர்சனங்களை முன்வைத்து வரும் கஸ்தூரியின் பதிவுகள் அவ்வப்போது வைரலாகவும் செய்கின்றன.

சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை கஸ்தூரியிடம் பெண்கள் மோசமான ஆடை அணிவதால் தான் ஆண்கள் தூண்டப்படுகிறார்கள் என்று பலரும் கூறுகிறார்கள் இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அவருக்கு மூடு வந்துவிடுமா?

இதற்கு பதில் அளித்த நடிகை கஸ்தூரி, இப்படி சொல்வது ஒரு ஆணுக்கு இழுக்கான விஷயம் ஒரு பெண்ணை அரைகுறையான ஆடைகள் பார்த்தாலே அவருக்கு மூடு வந்துவிடுமா..? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முக்கிய நபரின் மரணம்.. உடைந்து போன நடிகர் விஜய்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

நீங்களும் ஒரு ஆண்தானே?

மேலும், கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களை குறிப்பிட்டு, நீங்களும் ஒரு ஆண்தானே.. உனக்கு பெண்களை அரைகுறையாக பார்த்தால் உனக்கு மூடு வந்திடுமா..? என யாராவது கேட்டால் உங்களுக்கு கோபம் வருமா..? வராதா..?

ஆண்கள் தங்களை தாங்களே இழிவுப்படுத்திக்கொள்ளக்கூடிய ஸ்டேட்மென்ட் தான் பெண்கள் மோசமான ஆடை அணிகிறார்கள் என்று கூறுவது. அது உங்களை இழிவுபடுத்தும் வார்த்தை அல்லவா, என்று மறு கேள்வி எழுப்பி தடாலடி பதில் கொடுத்து இருக்கிறார்.

பெண்களை அரைகுறை ஆடையில் பாத்தால், ஆண்களுக்கு உடனே மூடு வந்து விடும் என்று கூறுவது ஆண்களுக்குதான் அவமானம் என்று நடிகை கஸ்தூரி இதன்மூலம் தடாலடி பதில் தந்து அசத்தியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version