கேமரா.. இன்னும் ஒரு நூல் கீழ இறங்கியிருந்தா… மொத்த மானமும் போயிருக்கும்.. கதற விடும் கேத்ரினா கைஃப்..!

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய நடிகைகள் பட்டியல் எடுத்தால் அதில் முதல் இடத்தில் இருப்பவர் நடிகை கேத்ரினா கைஃப். ஆனால் இவரால் இந்தியாவில் வாக்களிக்க முடியாது. காரணம் என்னவென்றால் இவர் ஹாங்காங்கில் பிறந்தவர்.

பிரிட்டிஷ் குடியுரிமை வைத்திருப்பவர். எனவே இவரால் இந்தியாவில் வாக்களிக்க முடியாது என்பது முதற்கட்ட தகவல். இதுபோல பல நடிகர் நடிகைகள் வேறு நாட்டு குடியுரிமை வைத்துக்கொண்டு இந்திய சினிமாவின் பிரபலங்களாக கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள் என்பது தனிக்கதை.

அதனை இன்னொரு பதிவில் விரிவாக பார்க்கலாம். சமீபத்தில், நடிகை கேத்ரினா கைஃப் தன்னுடைய நீண்ட நாள் காதலர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை விலகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் திருமணத்திற்குப் பிறகுதான் இன்னும் கூடுதலாக கவர்ச்சி காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்புகிறார். 1983ஆம் ஆண்டு இங்கிலாந்தில் பிறந்தவர் நடிகை கேத்ரினா கைஃப். இவருடைய உண்மையான பெயர் கேத்ரினா டர்கோட்டே என்பதாகும்.

தமிழில் இதுவரை இவர் ஒரு படத்தில் நடித்தது இல்லை. என்றாலும் கூட தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக இருக்கிறார். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் படத்தில் இவர்தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.

ஆனால் அப்பொழுது இவர் கிட்டத்தட்ட ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காரணத்தினால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக எந்திரன் படத்தில் நடிக்க முடியாமல் போனது.

இது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்றும் ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார் நடிகை கேத்ரினா கைஃப். இவர் நடிக்க மறுக்கவே இந்த கதாபாத்திரம் நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு சென்றது. அப்போதுதான் திருமணமாகியிருந்தது நடிகை ஐஸ்வர்யா ராய்-க்கு. ஆனால், ரஜினிக்கு ஹீரோயினாக நடிக்க வேண்டுமா..? தயார் என்று உடனே ஒப்புக்கொண்டு நடித்தார்.

தற்பொழுது மேரி கிறிஸ்மஸ் என்ற படத்தில் நடித்திருக்கும் நடிகை கேத்ரினா கைஃப்-பின் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் கேமரா இன்னும் ஒரு இன்ச் கீழ போய் இருந்தாக்கூட மொத்தமும் போயிருக்கும் என்று கதறி வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam