90களின் கனவுக்கன்னி நடிகை கௌசல்யா இப்போ எப்படி இருக்கார் பாருங்க.. ஆளே மாறிட்டாங்க..!

90-களில் முன்னணி கனவு கன்னியாக ரசிகர்களின் மத்தியில் வலம் வந்த நடிகை கௌசல்யா, கவிதா சிவசங்கர் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்தார்.

1979-ஆம் ஆண்டு பிறந்த இவர் நந்தினி என்று பெயரை மாற்றி மலையாள படங்களில் நடித்தார். தமிழைப் பொறுத்த வரை கௌசல்யா என்ற பெயரில் நடித்துக் கலக்கிய இவர் மலையாளத் திரைப்படத்தில் தான் முதன் முதலில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை கௌசல்யா..

இதனைத் தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய நடிகை கௌசல்யா பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர். இவர் தமிழ் திரையுலகில் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்தார்.

இதனை அடுத்து ரசிகர்களின் மனதை தனக்கு என்று ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட இவர் பூவேலி திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதினை பெற்று இருக்கிறார்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏறக்குறைய 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் பிரியமுடன், ஜாலி, ஆசையில் ஓர் கடிதம், தை பொறந்தாச்சு, ராஜகாளியம்மன், சந்தித்த வேளை, குபேரன், தாலி காத்த காளியம்மன், குட்டி, தேவன், திருமலை போன்ற தமிழ் படங்களில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

90- களின் கனவுக்கன்னி இப்ப எப்படி இருக்காங்க..

90-களில் கனவு கன்னியாக ரசிகர்களின் மத்தியில் வாழ்ந்து வந்த இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நடிப்பில் வெளி வந்த பாடலான ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம் என்ற பாடல் இன்றும் 2 கே கிட்ஸ் மத்தியில் பிரபலமாக உள்ளது என்றால் பாருங்களேன்.

சினிமாவில் இருந்து விலகியை இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியோடு சந்தோஷ் சுப்பிரமணியம் என்ற படத்தில் அவருக்கு அக்காவாக நடித்து அசத்தினார். இதனை அடுத்து சினிமா பக்கம் தலை காட்ட வில்லை.

ஆளே மாறிட்டாங்க.. நீங்களே பாருங்க..

மேலும் இவர் சன் டிவியில் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியல் ஆன சுந்தரி சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயர் திருமண நிகழ்ச்சி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டார்கள்.

இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகை கௌசல்யாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ஆள் எப்படி இருக்கிறார் என்பதை ரசிகர்கள் பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version