ஹரிஸ் கல்யாணின் STAR பட வாய்ப்பை அபகரித்தாரா கவின்..? அவரே கூறிய பதிலை பாருங்க..!

2018-ஆம் ஆண்டில் இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் நடிப்பில் வெளி வந்த பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தை கே ப்ரொடக்ஷன் தயாரித்திருந்தது.

மேலும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பாளராக இசை அமைக்க இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை அடுத்து இளன் மற்றும் ஹரீஷ் கல்யாண் இணைந்து ஸ்டார் என்கிற படத்தை எடுப்பதாக தகவல்கள் வெளி வந்ததோடு அந்த படத்தையும் யுவன் சங்கர் இசை அமைக்க ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக தெரிய வந்தது.

ஹரிஷ் கல்யாண் ஸ்டார் பட வாய்ப்பு..

இந்நிலையில் 2020 டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இளன் ஹரிஷ் கல்யாண் யுவன் கூட்டணியில் உருவாக இருந்த ஸ்டார் படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. இந்த முதல் பார்வையானது ரஜினி நடிப்பில் வெளி வந்த தளபதி படத்தைப் போலவே இருந்தது.

இதனை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பார்வையை பட குழு வெளியிட்ட சமயத்தில் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் நடித்திருந்த கமலஹாசன் தோற்றத்தில் ஹரிஷ் கல்யாண் இருந்ததை பார்த்து அனைவரும் வியந்தார்கள்.

யுவன் சங்கர் இசை அமைப்பில் இந்த படத்திற்கான மூன்று பாடல்களும் பதிவு செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் படப்பிடிப்பு மும்பை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் என்று படக்குழு அறிவித்த நிலையில் அந்த படம் தொடர்ந்து எடுக்கப்படவில்லை.

இதனை அடுத்து இந்த படம் கைவிட்டதாக பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் தற்போது அது குறித்த உறுதியான தகவல்கள் வெளி வந்து உள்ளது.

இதற்கு காரணம் தற்போது அந்த இயக்குனர் பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் பெரிய ஹீரோவை வைத்து இயக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.

ஸ்டார் படத்தை தட்டிப்பறித்தாரா கவின்..

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் அறிவிக்கப்பட்ட ஸ்டார் படம் நின்று போய் விட அந்த படத்தில் தற்போது வளர்ந்து வரும் நடிகர் கவின் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்துள்ளது.

அந்த விஷயத்தை உறுதி செய்யக்கூடிய வகையில் கவின் இந்த படத்தில் நடிக்க இருப்பது உறுதியான நிலையில் ஹரிஷ் கல்யாண் வாய்ப்பை தட்டிப் பறித்தாரா கவின் என்ற ரீதியில் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மேலும் என்ற செய்தியானது இணையத்தில் வைரலாக மாறி இருப்பதோடு ஹரிஷ் கல்யாணத்துக்கு போட்டியாக கவின் வந்து விட்டாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ஏற்கனவே ஹரிஷ் கல்யாண் ஷாருக்கான், ரஜினிகாந்த், கமலஹாசன் போல வேடமிட்டு வெளி வந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்ட சூழ்நிலையில் என்ன நடந்தது என்று தெரியாமல் அந்த படம் எடுக்கப்படாமல் அப்படியே முடங்கியது.

இப்படி ஏற்கனவே ஒருவர் ஒத்துக்கொண்ட படத்தில் நீங்கள் நடிப்பது உங்களுக்கு எப்படி இருக்கிறது என்று அண்மை பேட்டியில் ஒருவர் கேள்வி கேட்க ஆரம்பத்தில் தனக்கும் ஒருவர் ஒப்புக் கொண்ட படத்தில் நடிப்பதற்கு தயக்கமாகத் தான் இருந்தது.

எனினும் நான் நடிப்பதால் ஹரிஷ் கல்யாணுக்கும் மற்றவர்களுக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கவின் கூறி இருக்கிறார்.

கவின் என்ன சொன்னார்..

மேலும் இவ்வளவு பப்ளிசிட்டி ஆன படத்தில் மீண்டும் தான் நடிப்பது பற்றி யோசித்த அவர் இவரிடம் அந்த படத்தில் நடிக்க கேட்ட போது என்ன ஸ்டாரா? என்று நான் கேட்டேன்.

இதனைத் தொடர்ந்து அவர் முதலில் நீங்கள் கதையை கேட்டு கேளுங்கள். அதன் பிறகு மற்றதை எல்லாம் பேசிக்கொள்ளலாம் என்று கூறியதை அடுத்து நான் கதையைக் கேட்டேன். கதை பிடித்திருந்தது அதை தொடர்ந்து அங்கு என்ன நடந்தது என்பது போன்ற விஷயங்கள் எனக்குத் தேவையில்லை.

ஆனால் என்னால் மற்றவர்கள் சங்கடப்படக் கூடாது என்பதில் கவின் உறுதியாக இருந்ததால் அதைப் பற்றி மட்டும் கேட்க யாருக்கும் சங்கடம் ஏற்படாது என்று சொன்னதை அடுத்து நான் நடிக்க ஒப்புக்கொண்டேன் என கவின் கூறினார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version