“தன்னை விட 7 வயசு குறைவான நடிகருடன் ரொமான்ஸ்..” பண்ணும் நயன்தாரா.. அந்த லக்கி பாய் இவரு தான்..

நயன்தாரா, சமீப காலமாக மார்க்கெட் இழந்து வருகிறார் என்பது அவருக்கு படங்கள் கமிட் ஆகும் விதங்களிலேயே வெளிப்படுகிறது. அன்னபூரணி படத்தை தொடர்ந்து அவர் இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே, அவரது கணவர் விக்னேஷ் சிவன் இயக்கும் எல்ஐசி படத்தில், கதாநாயகன் பிரதீ்ப் ரங்கநாதனுக்கு அக்காவாக நடிக்க இருந்தார். கடைசியில் அந்த கேரக்டரில் நடிக்க விருப்பமின்றி அவராகவே வெளியேறி விட்டார். இந்த படத்தில் அப்பா கேரக்டரில் சீமான் நடிக்கிறார்.

நயன்தாரா

அதே போல் லேபிள் வெப் சீரிஸ் தந்த அபார வெற்றிக்கு பிறகு, அருண் காமராஜ் ஒரு புதிய படத்தை இயக்க கமிட் ஆனார். அந்த படத்தில் நடிக்க நயன்தாரா கமிட் செய்யப்பட்டு, பின்பு அதில் இருந்து நீக்கப்பட்டார். தக்லைப் படத்திலும் நயன்தாரா முதலில் நடிப்பதாக கூறப்பட்டு, பின் திரிஷா அதில் கமிட் ஆனார்.

சின்னத்திரையில் பிரபலமாகும் சிலர், ஒரு கட்டத்தில் சினிமாவிலும் பிரபலமாகி விடுகின்றனர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம் போன்றவர்கள் வரிசையில், நடிகர் கவினும் அந்த வரிசையில் இணைந்து விட்டார்.

கவின்

விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமானார் கவின். தொடர்ந்து சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. தாயுமானவன் என்ற சீரியலிலும் நடித்தார்.

தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டில், விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்துக்கொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த இலங்கை பெண் போட்டியாளர் லாஸ்லியா மீது தீராத காதல் கொண்டவராக ரொமான்ஸ் செய்து, பரபரப்பாக பேசப்பட்டார்.

அதன்பிறகு சினிமாவில் தீவிரம் காட்டினார். சத்ரியன் படத்தில் சின்ன ரோலில் நடித்த கவின், அடுத்து 2019ம் ஆண்டில், நட்புன்னா என்னான்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். கவினுக்கு இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ஜோடியாக நடித்தார்.

டாடா

அடுத்து கவின் நடிப்பில் வெளிவந்த லிப்ட் மற்றும் டாடா படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது. அதுவும் மனைவியை பிரிந்த நிலையில், குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு இளம் வயது தந்தை படும் வேதனையை இந்த படத்தில் மிக சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தார் கவின்.

வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் இப்போது கவின், கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நயன்தாரா கமிட் செய்யப்பட்டுள்ளார்.

ஏழு வயது குறைந்த…

இப்படி தொடர்ந்து தனக்கு பட வாய்ப்பு குறைந்துக்கொண்டே வருவதால், தன்னை விட ஏழு வயது குறைந்தவரான நடிகர் கவின் உடன் நடிக்க நயன்தாரா சம்மதித்துள்ளார். வெற்றிமாறன் டைரக்ஷன் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

எப்படி என்றாலும், தன்னை விட 7 வயசு குறைவான நடிகர் கவினுடன் ரொமான்ஸ் பண்ணும் நயன்தாராவுக்கும் அது கிளுகிளுப்பு தான். அந்த லக்கி பாய் கவினுக்கும் இது குதூகலம்தான்..

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version