ஸ்டார் மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா..? இதோ விபரம்..!

தொலைக்காட்சியில் இருந்து திரைப்பட ஹீரோவானவர்கள் லிஸ்டில் சிவகார்த்திகேயனை தொடர்ந்து தற்போது கவின் அடுத்த இடத்தில் இருக்கிறார்.

கவின் முதன் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பணியை தொடங்கி அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் கதாநாயகனாக நடித்த சீரியல் நடிகராக வலம் வந்தார்.

நடிகர் கவின்:

அதன் பிறகு இவருக்கு திரைப்பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து முயற்சித்து வந்த கவின் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகப்பெரிய அளவில் பரிட்சயமானார்.

மிகப்பெரிய ஹீரோவாக வேண்டும் என்ற கனவோடு வந்த கவின் கூத்து பட்டறையில் சேர்ந்து கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நடிப்பு பயிற்சி எடுத்து அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.

அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு கனா காணும் காலங்கள் தொடரில் சிவா என்ற கேரக்டரில் நடித்து மிகப்பெரிய அளவில் சின்ன துறை நடிகராக பிரபலமானார்.

சீரியல் நடிகராக கவின்:

அதன் மூலம் தான் அவருக்கு சரவணன் மீனாட்சி தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்த அதிகம் மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் கவின்.

கவினின் முதல் திரைப்படம் என எடுத்துக்கொண்டோமானால் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த சத்ரியன் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார்.

அதையடுத்து 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

இப்படத்தில் ரம்யா நம்பீசன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த சமயத்தில் தான் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கவினுக்கு கிடைத்தது.

பிக்பாஸ் கொடுத்த பிரபலம்:

அதை ஒரு நல்ல பிளாட்பார்ம் ஆக எடுத்துக்கொண்ட கவின் அதன் பிறகு டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

2023 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு பெயர் சொல்லும் படமாக நல்ல அடையாளத்தையும் பிரபலத்தையும் ஏற்படுத்தி கொடுத்தது.

அதை அடுத்து தனது சம்பளத்தையும் உயர்த்துக் கொண்ட கவின் அந்த படத்தை தொடர்ந்து தற்போது ஸ்டார் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்டார் திரைப்பட வசூல்:

இளன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் கடந்த 10 தேதி வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்து வருகிறது.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளஇப்படத்தை உலகம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

படம் வெளிவந்து மூன்று நாட்கள் ரூ.12 கோடிக்கும் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்துள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 10 கோடி வரை வசூல் ஈட்டி சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது கவின் சினிமா மார்க்கெட்டை மேலும் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version