ரத்தமும் சதையுமாக காட்சிகள்.. என்ன நடிப்பு டா சாமி.. மிரட்டும் கவினின் STAR ட்ரெய்லர்..!

விஜய் டிவியின் மூலம் பிரபலமான சிலர் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றனர் என்பது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. சீரியலில் நடித்தவர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றவர்கள், காமெடி செய்தவர்கள் என ஒரு கட்டத்தில் அந்த பிரபலத்தை வைத்தே வெள்ளி திரையில் அறிமுகம் ஆகி விடுகின்றனர்.

அப்படி வருபவர்களில் ஒரு சிலர், ஒரு சில படங்களில் நடித்துவிட்டு திடீரென காணாமல் போய்விடுகின்றனர்.

சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர், தீனா போன்றவர்களைச் சொல்லலாம். அந்த வரிசையில் இப்போது நடிகர் கவின் வந்துவிட்டார். வளரும் இளம் நடிகராக இரண்டாம் தர வரிசைக்கு முன்னேறி விட்டார் என்று சொல்லலாம்.

கவின்

விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்த கவின், பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து டாடா, லிப்ட் இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார்.

ஸ்டார் படம்

அதைத் தொடர்ந்து இப்போது கவின் நடிப்பில், அடுத்து வெளியாக உள்ள படம் ஸ்டார். இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் முதல் தரமான ஒரு படமாக கவின் நடித்துள்ள ஸ்டார் படம் இருக்கும் என்று, அந்த படத்தின் ட்ரெய்லர் நல்ல நம்பிக்கையை தந்துள்ளது.

டைரக்டர் இளன்

ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா வில்சன் நடித்த பியார் பிரேமம் காதல் என்ற படத்தை இயக்கிய டைரக்டர் இளன், இப்போது இயக்கி உள்ள படம் ஸ்டார். இந்த படத்தில் கவின், லால், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் அதிதி போஹங்கர் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் வரும் மே 10ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்றுள்ளது

தமிழில் தொடரும் தோல்வி படங்கள்

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் வந்த எந்த படமும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. குறிப்பாக லால் சலாம், கேப்டன் வின்னர், அயலான், சிங்கப்பூர் சலூன் லவ்வர், வடக்குப்பட்டி ராமசாமி, ரோமியோ, கள்வன், டியர் என பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

மலையாள படங்களுக்கு வரவேற்பு

ஆனால் மலையாள படங்கள் தொடர்ந்து தமிழகத்தில் பெரிய அளவில் வெற்றியை பெற்று வருகின்றன. குறிப்பாக பிரம்மயுகம், பிரேமலு, மஞ்சும்மெல் பாய்ஸ், ஆடுஜீவிதம், ஆவேசம், வருஷங்களுக்கு விசேஷம் என வரிசையாக மலையாள படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.

தமிழில், டைரக்டர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 படம் வெளியாக இருக்கிறது. அதற்கு முன்பாக இங்கே நான்தான் கிங்கு என்ற சந்தானம் படமும், அமீர் நடித்துள்ள உயிர் தமிழுக்கு என்ற படமும் வரும் மே மாதம் ரிலீஸ் ஆகிறது. அதே நேரத்தில், கவின் நடித்துள்ள ஸ்டார் படமும் வெளியாகிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

தரமான சம்பவமாக இருக்கும்

இந்த படம் தரமான சம்பவமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளது. இந்த படத்தில் பெண் வேடத்தில் கவின் காணப்படுவதால், ஒவ்வொரு சீனிலும் ட்ரைலர் மூலமாக இது வேற ரகமான படம், வேற லெவலில் இருக்கும் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடிப்பு டா சாமி

ரத்தமும் சதையுமாக காட்சிகளை பார்த்து, என்ன நடிப்பு டா சாமி என்று மிரட்டும் கவினின் STAR ட்ரெய்லர் குறித்து ரசிகர்கள் மத்தியில், பரபரப்பாக இப்போதே பேச துவங்கி விட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam