தமிழ் தமிழ் சினிமாவில் முன்பை விட இப்பொழுது ஒரு நடிகருக்கு கதாநாயகனுக்கான அந்தஸ்து கிடைப்பது என்பது கடினமான ஒரு விஷயமாக ஆகிவிட்டது.
ஏனெனில் அதிகபட்சம் சின்ன படங்கள் எடுக்கும் தயாரிப்பாளர்கள் புதுப்புது கதாநாயகர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய வண்ணம் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எல்லோரையுமே மக்கள் கதாநாயகனாக ஏற்றுக் கொள்வது கிடையாது.
மக்கள் யாரை கதாநாயகனாக ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்கள் தான் சினிமாவில் தொடர்ந்து வளர்ந்து வர முடியும் என்கிற நிலைமை இருக்கிறது. இதில் சில நடிகர்கள் விதிவிலக்காக மக்கள் மத்தியில் ஒரு சில திரைப்படங்களிலேயே அதிக வரவேற்பு பெறுகின்றனர்.
வரவேற்பை பெற்ற நடிகர்:
அப்படியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருப்பவர்தான் நடிகர் கவின். லிஃப்ட் என்கிற திரைப்படத்தில் கவின் நடித்த பொழுது அந்த திரைப்படம் திரையரங்கில் நேரடியாக வெளியாகவில்லை இருந்தாலும் அந்த திரைப்படத்திற்கு நிறைய வரவேற்புகள் கிடைத்தது.
அதனை தொடர்ந்து அதற்கு பிறகு கவின் நடித்த டாடா திரைப்படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு திரைப்படமாக அமைந்தது. எப்போது குடும்ப ஆடியன்ஸை ஒரு திரைப்படம் நிறைவு செய்கிறதோ அப்பொழுது அந்த கதாநாயகருக்கான மார்க்கெட் என்பது அதிகரிக்க தொடங்கிவிடும்.
அந்த வகையில் கவினுக்கான மார்க்கெட் அதிகரிக்கத் தொடங்கியது தொடர்ந்து அடுத்து கவின் நடித்த திரைப்படம் ஸ்டார். ஸ்டார் திரைப்படம் குடும்ப அடியன்ஸ்க்கு அவ்வளவாக ஒத்துப் போகவில்லை என்றாலும் கமர்சியல் ரசிகர்களுக்கு அந்த திரைப்படம் பிடித்திருந்தது.
குடும்ப ஆடியன்ஸ் படம்:
ஆனாலும் குடும்ப ஆடியன்ஸ்கான திரைப்படங்களை கவின் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வருகின்றன. இந்த நிலையில் முதன்முதலாக ஒரு விருது வழங்கும் விழாவில் விருது வாங்கும் பொழுது கவின் பேசிய விஷயங்கள் பலரையும் ஈர்க்கும் விதமாக இருந்தது
அதில் கவின் பேசும் பொழுது நிவின் பாலி ,விஜய் தேவரகொண்டா மாதிரியான நடிகர்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் நான் பாலோ செய்து வருகிறேன். அவர்கள் போடும் ஒவ்வொரு பதிவிற்கும் நான் தொடர்ந்து லைக் கொடுத்து வருகிறேன்.
அவர்களை எல்லாம் நேரில் பார்ப்பேன் என்று நான் நினைத்ததே கிடையாது அவர்களைப் பார்ப்பதே எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும் செல்வராகவன் சார் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இயக்குனர் அவர்.
நான் வெளியில் இருந்த பொழுது என்னிடம் உங்களுக்கு டேட்டிங் போக வேண்டும் என்றால் யாரோடு போக ஆசைப்படுகிறீர்கள் என்ற ஒரு கேள்வியை கேட்டிருந்தனர். அப்பொழுது நான் செல்வராகவன் சாரோடு சேர்ந்து போக வேண்டும் என்று கூறினேன் அந்த அளவிற்கு எனக்கு செல்வராகவனை பிடிக்கும் என்று கூறுகிறார் கவின்.