பெண்களில் பலர் அழகாக இருக்கின்றனர். ஆனால் சில நேரங்களில் ஆண்கள் பெண் வேடமிட்டாலும் அழகாக இருக்கின்றனர். அப்படி பெண் வேடமிட்டு நடித்த ஆண் நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன், அவ்வை சண்முகி படத்தில் சண்முகியாக அசத்தியிருந்தார். அதே போல் ஆணழகன் படத்தில் பிரசாந்த அதகளம் செய்திருந்தார்.
அப்படி சில நடிகர்களுக்கு மட்டுமே, பெண் வேடமும் அந்த கெட்டப்பும் அம்சமாக பொருந்திப் போய் விடுகிறது.
கவின்
கவின் வளர்ந்து வரும் இளம் நடிகராக இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி நடிகராக, நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர். சரவணன் மீனாட்சி 2 என்ற தொடரிலும், அடுத்து பிக்பாஸ் தமிழ் சீசன் 3 என்ற நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
குறும்படங்களில் நடித்தார்
நடிகர் கவின் திருச்சியை சேர்ந்தவர். நடிகரான பிறகு இப்போது சென்னைவாசியாக மாறிவிட்டார். ஊடகத்துறையில் இருந்த ஆர்வத்தால், துவக்கத்தில் நண்பர்கள் மூலமாக, கவின் சில குறும்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இதைத் தொடர்ந்து முறையாக நடிப்பு கற்றுக் கொள்ள ஆசைப்பட்டு, கூத்துப்பட்டறையில் சேர்ந்து மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்தார். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் தனது நடிகராக வாழ்க்கையை தொடங்கினார்.
கனா காணும் காலங்கள்
கடந்த 2011ஆம் ஆண்டில், கனா காணும் காலங்கள் என்ற தொடரில் சிவா என்ற கேரக்டரில் நடித்து சீரியல் நடிகராக கவின் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சரவணன் மீனாட்சி, தாயுமானவன் போன்ற சீரியல்களில் நடித்த இவர் பிறகு சரவணன் மீனாட்சி 2 தொடரிலும் கதாநாயகனாக நடித்தார். இந்த தொடர் கவினுக்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது.
நட்புன்னா என்னன்னு தெரியுமா?
தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் கவின் நடித்தார். அதன்பிறகு 2019 ஆம் ஆண்டு, நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் மூலமாக இவர் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில்…
அதன் பிறகு 2019 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர் லாஸ்லியாவை, பிக்பாஸ் வீட்டுக்குள் துரத்தி துரத்தி காதலித்தார். அதனால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு கவின், வெளியே வந்த பிறகு டாடா, லிப்ட் போன்ற படங்களில் நடித்து, மக்கள் மத்தியில் நல்ல அடையாளத்தைப் பெற்றார்.
அதன் பிறகு இப்போது ஸ்டார் என்ற படத்தில் கவின் நடித்துள்ளார். இந்த படம் வருகிற மே 10ஆம் தேதி திரைக்கு வருகிறது.
பெண் கெட்டப்பில் புகைப்படங்கள்
இந்நிலையில் கவின் பெண் கெட்டப்பில் இருக்கும் ஒரு சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இது கவின் நடிக்கும் படத்துக்காக எடுக்கப்பட்டதா அல்லது அவராக தனியாக பெண் வேடமிட்டு தன்னை புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் இந்த புகைப்படம் போது செம வைரலாகி வருகிறது.
மேலும், நடிகர் கவின் பெண் வேடத்தில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.