இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த கயல் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை ஆனந்தி. இந்த படம் கொடுத்த வெற்றி இவருடைய பெயருக்கு முன்னால் இந்த படத்தின் பெயரை இணைத்துக் கொள்ளும் அளவுக்கு இருந்தது.
எனவே தன்னுடைய பெயரை கயல் ஆனந்தி என்று மாட்டிக் கொண்டிருக்கிறார். சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர் உதவி இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருடைய திருமணம் குறித்து இரு வேறு கருத்துக்கள் இணையத்தில் பரவி வந்தன. நடிகை கயல் ஆனந்தி காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு தரப்பும்… இல்லை என்னுடைய வீட்டில் பார்த்து வைத்த வரனைத்தான் நான் திருமணம் செய்து கொண்டேன் இனிமேல் அவரை காதலிப்பேன் என்றும் கயல் ஆனந்தி பதில் கொடுத்து இருந்தார்.
இப்படி இருக்க ஒரு குழந்தைக்கு தாயுமாக இருக்கும் கயல் ஆனந்தி.. சமீப காலமாக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து வருகிறார். திருமணம் குழந்தை என சிறு ஓய்வுக்கு பிறகு மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடிக்க தொடங்கி இருக்கும் கயல் ஆனந்தி கிட்டத்தட்ட அரை படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. திரைப்படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரியஸ்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கும் கயல் ஆனந்தி முதன்முறையாக நீச்சல் உடையில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் புதிய வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த வெப் சீரிஸ் குறித்த அதிகாரப்பூர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Summary in English : Kayal Aanandhi, the renowned Indian actress, is set to do her first role in a swimsuit in her upcoming webseries. This is a groundbreaking move for the actress who has always been known to prefer traditional roles and costumes.