Site icon Tamizhakam

கல்யாணம் ஆன முதல் மாசமே கர்ப்பம்.. இது தான் காரணம்..! கூச்சமின்றி கூறிய கயல் ஆனந்தி..!

கயல் திரைப்படத்தின் மூலம் தன் பெயருக்கு முன் கயல் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் நடிகை கயல் ஆனந்தி. இவர் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகம் ஆனபோதே ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.

இவர் நடித்த படங்கள் பெரிய அளவு வெற்றியை தரவில்லை என்றாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடிய வகையில் ஒவ்வொரு படமும் இருக்கும். அந்த வகையில் 2014 – ஆம் ஆண்டு வெளி வந்த பொறியாளன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து பிரபு சாலமன் இயக்கத்தில் வெளி வந்த கயல் படத்தில் நடித்த கூடிய வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் கிராமப்புற கெட்டப்பில் பாவாடை, சட்டை அணிந்து எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

இதற்குப் பிறகு பல வாய்ப்புகள் கயல் ஆனந்திக்கு வந்து சேர்ந்தது. அந்த வகையில் வெற்றி மாறனின் விசாரணை, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த படியேறும் பெருமாள் போன்றவற்றில் இவரது நடிப்பு பேசும் படி இருந்ததால் இவரது திரைப்பட வாழ்க்கையில் இந்த இரு படங்களுமே திருப்புமுனையை அமைத்துக் கொடுத்தது.

மேலும் இவர் இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து திரிஷா இல்லைனா நயன்தாரா என்ற படத்தில் நடித்திருக்கிறார். அத்தோடு தினேஷுக்கு ஜோடியாக இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற படத்தில் நடித்தார்.

இதனை அடுத்து சண்டிவீரன், மன்னர் வகையறா போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டார். தற்போது தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடித்து பிசியான நடிகைகளின் வரிசையில் ஒருவராகி விட்டார்.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர் சினிமாவில் ஒரு உச்சகட்ட அந்தஸ்தை பெற்று விடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் தன்னுடைய காதலர் உடனான திருமண அறிவிப்பை கொடுத்து ஷாக் ஆக்கினார்.

இவரின் காதலன் துணை இயக்குனராக இருக்கும் சாக்ரடீஸ், இவரை காதலித்து 2021 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து இவருக்கு அழகிய ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

சீக்கிரமே திருமணம் அதற்குள் குழந்தையா? என்று ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்ப அதற்கு உரிய முக்கிய காரணத்தை அண்மை பேட்டியில் தெரிவித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆக்கிவிட்டார்.

இதற்கு காரணம் திருமணம் ஆன முதல் மாதத்திலேயே கர்ப்பம் தரித்து விட்டார். திருமணம் ஆன நாளிலிருந்து எவ்வளவு சீக்கிரத்தில் குழந்தை பிறக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் கணவன் மனைவிக்குள் அன்னோன்யம் அதிகரிக்கும் என்ற தகவலை கூறியிருக்கிறார்.

மேலும் கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். இரண்டு குடும்பத்துக்கும் இடையே உள்ள உறவு வலுவாகும். இதன் மூலம் குடும்பத்தில் அமைதி, மகிழ்ச்சி பொங்கும்.
இது வரை யாரும் சொல்லாத உண்மை கருத்தை சொல்லி இருக்கும் கயல் ஆனந்தி. அதனால் தான் திருமணம் முடிந்த உடனே கர்ப்பம் ஆகிவிட்டேன் என்ற செய்தியை  கூறியுள்ளார்.

Exit mobile version