மலிவு விலையில் மேக்ஸி ரக ஸ்கூட்டர்கள் பிரிவில் கீவே ஜிடி270.

இங்கிலாந்து நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஓன்றான கீவே நிறுவனம் விரைவில் இந்தியாவில்  பிரபல மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடலான ஜிடி270-ஐ நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. 

இதன் அடிப்படையில் கே-லைட் க்ரூஸர் ரக இருசக்கர வாகனத்தை வரும் மே 17 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த தகவலை நிறுவனம் கடந்த வாரமே உறுதிப்படுத்தியது. 

மேலும் கீவே நிறுவனம் அதன் ஜிடி270 மேக்ஸி ரக ஸ்கூட்டரையே அறிமுகம் செய்ய இருக்கின்றது. கே-லைட் க்ரூரஸ் மோட்டார்சைக்கிளுடன் சேர்த்து இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரையும் அது அறிமுகம் செய்ய உள்ளது. 

ஜிடி270 மேக்ஸி ஸ்கூட்டரில் பியாஜியோ நிறுவனத்தின் 278.2 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவர் இன்ஜெக்ட் லிக்யூடு கூல்டு தொழில்நுட்பம் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 19 எச்பி பவரை 6,500 ஆர்பிஎம்மிலும், 22.5 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும் இன்னும் பல மடங்கு அதிகமானதாக்கும் வகையில், கீவே ஜிடி270 மேக்ஸி ஸ்கூட்டரில் பன்முக பிரீமியம் அம்சங்கள் இடம் பெற இருப்பதாக கூடுதல் தகவல்கள் வந்துள்ளது.

இது தற்போது இந்தியாவில் விற்பனையில் உள்ள சுஸுகி பர்க்மேன் மற்றும் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் ஆகிய மேக்ஸி ரக ஸ்கூட்டர் மாடல்களுக்கு போட்டியாக கீவே ஜிடி 270 இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது மட்டுமின்றி பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் சி400ஜிடி-க்கும் இது போட்டியாக அமையும்.

கீவே நிறுவனம் பற்றிய தகவல்:

 சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் கீவே, க்யூஜே-விற்கு சொந்தமானது ஆகும். பெனெல்லி பிராண்டும் இந்த குழுமத்திற்கு சொந்தமானதுதான். இந்நிறுவனம், சிறிய க்ரூஸர் ரக மோட்டார்சைக்கிள்கள், ஸ்கூட்டர்கள், ஸ்ட்ரீட் ரக பைக்குகள் மற்றும் 125 சிசி திறன் கொண்ட டூ-வீலர்களை உருவாக்கி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …