“மண மணக்கும் மணத்தக்காளி தோசை..! – இப்படி செய்யுங்க பாஸ்..!

வெயில் காலத்தில் சூடு காரணமாக வாயில் புண்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி ஏற்பட ஏற்படக்கூடிய புண்களுக்கு இயற்கையான முறையில் கடவுள் கொடுத்த வரப் பிரசாதமான மணத்தக்காளி கீரையைக் கொண்டு தோசை செய்து சாப்பிடுவதின் மூலம் விரைவில் புண்களை சரி செய்ய முடியும்.

அந்த வகையில் மணத்தக்காளி கீரை தோசையை எப்படி செய்யலாம் என்பது பற்றி இந்த கட்டுரையில் விரிவாக நாம் தெரிந்து கொள்ளலாம்.

மணத்தக்காளி கீரை தோசை செய்ய தேவையான பொருட்கள்

1.இட்லி அரிசி அரை கிலோ

2.உளுந்து 150 கிராம்

3.சின்ன வெங்காயம் 10

4.பூண்டு 5 பல்

5.இஞ்சி ஒரு சிறு துண்டு

6.சீரகம் 1/4 டீஸ்பூன்

7.மிளகு கால் டீஸ்பூன்

8.பச்சை மிளகாய் 3

9.கொத்தமல்லி சிறிதளவு

10.மணத்தக்காளி கீரை இரண்டு கைப்பிடி

11.எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

 முதலில் இட்லி அரிசி மற்றும் உளுந்தினை இட்லிக்கு அரைக்க கூடிய பதத்தில் ஊறவைத்து, ஊறிய பிறகு கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும்.

இதனை அடுத்து இந்த இரண்டு பொருட்களும் அரைபடும்போதே எடுத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, பச்சை மிளகாய், கொத்த மல்லி, மணத்தக்காளி கீரை இவற்றையெல்லாம் நன்கு கழுவி அதனோடு போட்டு அரைத்து விடுங்கள். பிறகு இதற்கு தேவையான அளவு உப்பினை சேர்த்துக் கொள்ளவும்.

 மேலும் மாவு அரைத்த மூன்று மணி நேரத்துக்குப் பின்பு நீங்கள் இந்த தோசையை சுட்டு எடுக்கலாம். இப்போது நீங்கள் தோசை கல்லை அடுப்பில் போட்டு அடுப்பை பற்ற வைத்து மணத்தக்காளி கீரை தோசையை பக்குவமாக சுட்டு எடுக்கவும்.

இந்தக் கீரையானது உங்கள் உடலில் இருக்கும் புண்கள் மட்டுமல்லாமல் குடல் மற்றும் வாயில் இருக்கக்கூடிய புண்களை ஆற்ற கூடிய தன்மை கொண்டது.

எனவே தவறாமல் எந்த தோசையை நீங்கள் உண்பதின் மூலம் இயற்கையாகவே மருந்துகள் உட்கொள்ளாமல் உங்கள் புண்கள் மற்றும் குடலில் ஏற்படும் அல்சரையும் தடுக்க முடியும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …