தமிழில் முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி..! – யாருன்னு பாருங்க..!

கீர்த்தி ஷெட்டி, இயக்குநர் ராஜமுருகனின் ஜப்பான் படத்திற்கு பிறகு எடுக்கப்படும் அடுத்த புதிய படத்தில், கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர், மும்பை, மகாராஷ்டிராவை சேர்ந்த 21 வயது பெண். துளுவை தாய்மொழியாக கொண்டவர். உப்பென்னா தெலுங்கு படத்தில் அறிமுகமான இவர் தமிழில் வனமகன் படத்தில் நடித்திருக்கிறார். அதற்கு முன், வணிகரீதியான பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார் கீர்த்தி ஷெட்டி. மாடலிங் துறையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஜோக்கர், குக்கூ ஆகிய மிகச் சிறந்த படங்களை இயக்கியவர் ராஜூ முருகன். இவர் படத்தில் நடிப்பதாக கார்த்தி ஒப்புக்கொண்ட நிலையில், அடுத்தடுத்த படங்களில் கார்த்தி தொடர்ந்து நடித்துக்கொண்டே இருந்ததால், இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கவே, ஓராண்டுக்கு மேல் தாமதமாகி விட்டது.

karthi

அதன்பின், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு, இந்த படத்தில் நடிக்க கார்த்தி முன்வந்தார். இது, கார்த்தியின் 25வது படம். இந்த படத்துக்கு ஜப்பான் என பெயரிடப்பட்டது. இதில் கார்த்தி வித்யாசமான கெட்டப்பில் இருந்த புகைப்படங்கள் செம வைரலானது. ஜப்பான் படம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இந்த படம் முடிவடைந்த பிறகு, அடுத்த புதிய படத்தில், நலன் குமாரசாமி இயக்கத்தில், ஞானவேல் ராஜா தயாரிப்பில், கார்த்தி நடிக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க முதலில் காயத்ரி பரத்வாஜ் ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், திடீரென அந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டார். இதையடுத்து அந்த புதிய படத்தில், கார்த்தியடன் ஜோடியாக நடிக்க, கீர்த்தி ஷெட்டி ஒப்பந்தமாகி உள்ளார்.

keerthi shetty,

தெலுங்கில், உப்பென்னா படம், இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது. ஆனால், தமிழில் சில படங்களில் நடித்தும் இவருக்கு பெரிய வரவேற்பும், மக்கள் மத்தியில் புகழும் கிடைக்கவில்லை. டைரக்டர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில், இவர் நடிப்பதாக கூறப்பட்டது. பின், இவர் அந்த படத்தில் நடிக்கவில்லை.

keerthi shetty,

இந்நிலையில், கார்த்தியுடன் நடிக்கும் இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த புதிய படத்தில், தனது கேரக்டர் பேசப்படும் அளவுக்கு சிறப்பான நடிப்பைத் தர வேண்டும் என்பதில் கீர்த்தி ஷெட்டி மிக ஆர்வமாக இருந்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தில், வந்தியத்தேவனாக நடித்த கார்த்தியின் இமேஜ், முன்பை விட பலமடங்கு கூடியுள்ளது. இதில், அந்த படத்தின் 2ம் பாகம், வரும் 28 ம்தேதி ரிலீஸ் ஆகிறது. எனவே, இன்னும் கார்த்திக்கு மவுசு அதிகரிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

keerthi shetty,

சமூக வலைதள பக்கங்களில் மிக ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, அவ்வப்போது தனது புகைப்படங்களை, வீடியோக்களை அப்டேட் செய்து வருகிறார். அதுவும், கேஷூவல் ஆடைகளில், அவர் உடற்பயிற்சி செய்வதும், நடனமாடுவதும் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …