இது என்ன மாயம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக விக்ரம் பிரபு நடித்தார். இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு பெற்று தரவில்லை.
அதற்கு பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படம் , தொடரி, பைரவா என்று வந்த அனைத்து படங்களும் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தன. இதற்கு நடுவே அவரது நடிப்பு சரியில்லை என்று கூறி சில படங்களில் அதிக விமர்சனத்திற்கு உள்ளானாலும் கூட பிறகு அவர் நடித்த மகாநதி திரைப்படம் அதிகமான வரவேற்பு பெற்று கொடுத்தது.
சினிமாவில் வரவேற்பு:
நடிகை சாவித்திரியின் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து பலரும் அப்பொழுது கீர்த்தி சுரேஷை பாராட்டி வந்தனர்.
keerthi sureshஅதிலிருந்து தமிழ் இளைஞர்களின் கனவு கனியாக கீர்த்தி சுரேஷ் மாறியிருந்தார். அவரது திரைப்படங்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் வரவேற்புகளும் வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் அவருக்கு ரசிகர்களால் நடந்த ஒரு அன்பு தொல்லை குறித்து தனது பேட்டியில் அவர் கூறியிருக்கிறார்.
ரசிகரின் கடிதம்:
பொதுவாகவே ரசிகர்கள் கீர்த்தி சுரேஷிற்கு கடிதம் எழுதுவது வழக்கம் அவற்றை எல்லாம் கீர்த்தி சுரேஷ் தினசரி படித்து பார்த்துக் கொண்டிருப்பார் இப்படி தினமும் ஒரு நபர் தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு கடிதம் எழுதி வந்துள்ளார்.
தொடர்ந்து கீர்த்தி சுரேஷை காதலித்து வருவதாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் அந்த கடிதத்தை எழுதி இருக்கிறார் அதில் அவரது பெயரை குறிப்பிட்டேதான் எழுதி அனுப்புவாராம். இருந்தாலும் கீர்த்தி சுரேஷ் அவருக்கு பதில் அனுப்பியது இல்லை.
இந்த நிலையில் ஒருநாள் ஒரு நபர் கீர்த்தி சுரேஷ் வீட்டிற்கு வந்திருக்கிறார் ஆனால் அந்த சமயத்தில் கீர்த்தி சுரேஷ் அவரது வீட்டில் இல்லை அந்த வீட்டுக்கு வந்த நபர் வீட்டு வேலையாட்களிடம் கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியிருக்கிறார்.
அப்போது பேசிய அந்த நபர் ஏன் கீர்த்தி சுரேஷ் இந்த மாதிரியான படங்களில் எல்லாம் நடிக்கிறார் என்று அறிவுரை கூறியிருக்கிறார். கிட்டத்தட்ட கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து கொண்டது போலவும் அவரது கணவர் போலவும் உரிமை எடுத்துக் கொண்டு அந்த நபர் பேசி இருக்கிறார்.
அதனை கேட்ட பொழுது மிகவும் ஷாக்காக இருந்தது என்று கீர்த்தி சுரேஷ் அந்த பேட்டியில் இந்த நிகழ்வை விளக்கி இருக்கிறார்.