தமிழில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ் பொதுவாக நடிகைகள் பலரும் பல திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவார்கள். ஆனால் ஒரு சில திரைப்படங்களிலேயே மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
முதன்முதலாக இது என்ன மாயம் என்கிற திரைப்படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இந்த திரைப்படத்தில் விக்ரம் பிரபு ஜோடியாக இவருடன் நடித்திருந்தார். ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பு தராத காரணத்தினால் கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்து நடித்த திரைப்படம் ரஜினி முருகன்.
வரவேற்பை கொடுத்த படம்:
ரஜினி முருகன் திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. படத்திலும் முக்கியமான கதாபாத்திரமாக கதாநாயகி கதாபாத்திரம் இருந்தது. அதனை தொடர்ந்து அவர் நடித்த தொடரி ரெமோ போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
ஆனால் தொடரி மற்றும் பைரவா ஆகிய இருத் திரைப்படங்களில் நடித்த போது மட்டும் அதிக அளவு எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிப்பு திறனை வெளிப்படுத்தும் விதமாக நடித்த திரைப்படம் மகாநதி.
இந்த திரைப்படம் தமிழில் நடிகையர் தினமும் என்கிற பெயரில் வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக மீண்டும் அதிக வரவேற்பை பெற்றார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் அதிக பட வாய்ப்புகள் கிடைத்தஅதே சமயத்தில் அவருக்கு தெலுங்கு சினிமாவிலும் நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
தெலுங்கு சினிமாவில் வாய்ப்பு:
ஆனால் தெலுங்கு சினிமாவில் உள்ள பிரச்சனை என்னவென்றால் கவர்ச்சிக்கு தெலுங்கு சினிமாவில் அதிக மதிப்பு உண்டு. அதனால் நடிகைகள் கண்டிப்பாக கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்கிற நிலைமை இருந்தது.
அதுவரை தமிழ் தெலுங்கு இரண்டிலுமே பெரிதாக கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் சர்க்காரி வாரி பட்டா திரைப்படத்தில் முதன்முதலாக கவர்ச்சியாக நடித்து பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்திருந்தார்.
இதனை தொடர்ந்து தற்சமயம் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நடிப்பதற்கு தயாரான ஒரு நடிகையாக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார் சமூக வலைதளங்களிலும் கொஞ்சம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்திருக்கிறது.