வாழ்கையில் இப்படி எல்லாம் நடக்குமா..? உச்ச கட்ட சோகத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இரண்டாவது திரைப்படத்திலேயே மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை கீர்த்தி சுரேஷ். முதன்முதலாக விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் அறிமுகம் ஆனார்.

ஆனால் அந்த படத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை பிறகு இரண்டாவதாக அவர் நடித்த திரைப்படம் ரஜினி முருகன். ரஜினி முருகன் திரைப்படம் கீர்த்தி சுரேஷிற்கு பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.

தொடர்ந்து வாய்ப்பு:

அந்த செண்டிமெண்ட் காரணமாகதான் பிறகு தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து சில திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்தார். பிறகு கீர்த்தி சுரேஷிற்கு தொடர்ந்து பெரிய நடிகர்கள் திரைப்படங்களில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்த பொழுது அவரது நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது. அந்த விமர்சனத்தை கட்டுப்படுத்தும் வகையில் கீர்த்தி சுரேஷ் அடுத்து நடித்த திரைப்படம் நடிகையர் திலகம்.

நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ். அதற்காக அவருக்கு விருதுகளும் கிடைத்தது. அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷிற்கு நடிகர் விஜய்யுடன் தொடர்ந்து நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது.

தோழியின் இழப்பு:

இந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியது. தமிழ் சினிமாவில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காமல் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ், தெலுங்கு சினிமாவிற்கு போன பிறகு கவர்ச்சி காட்ட துவங்கினார். நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த சர்க்காரி வாரி பட்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பொழுது கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சி காட்டி நடித்தார் கீர்த்தி சுரேஷ்

இந்த நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் சோகமான பதிவு ஒன்றை பதிவேற்றி இருந்தார். அதில் தனது நெருங்கிய தோழி மனிஷா என்பவரை பற்றி கூறியிருந்தார், மனிஷா என்பவர் மூளை புற்றுநோய் காரணமாக உயிரிழந்திருக்கிறார். அவரது இறப்பு குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த கீர்த்தி சுரேஷ் ”பிரைன் ட்யூமர் நோய்க்காக 21 வயதிலிருந்து சிகிச்சை பெற்று வந்தார் எனது தோழி. 8 வருடங்களாக அவர் போராட்டம் நடத்தினார். ஒரு நாள் அவளை மருத்துவமனையில் சந்தித்தேன்.

என்னால் அவரது நிலைமையை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாமல் கட்டுப்படுத்திக் கொண்டு வந்தேன். கடைசியாக நான் அவளை பார்த்த பொழுது சுயநினைவே இல்லாமல் இருந்தார். அதற்குப் பிறகு நான் அவளை பார்க்கவே இல்லை..

எனக்கு தோன்றும் கேள்விகள் எல்லாம், ஒரு இளம் பெண்ணுக்கு அவளுடைய வாழ்க்கையை தொடங்குவதற்கு முன்பே அவளுடைய விருப்பங்கள் கனவுகள் எதுவுமே நிறைவேறுவதற்கு முன்பே எதற்காக இப்படி ஆக வேண்டும்.

இப்பொழுதும் இதற்கு எனக்கு விடை தெரியவில்லை. அவள் இறந்து ஒரு மாத காலம் ஆகிவிட்டது. இருந்தாலும் தினமும் அவளது நினைவு வந்து கொண்டே இருக்கிறது என்று உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version