இந்த நடிகருக்கு தங்கச்சியா நடிக்கவே மாட்டேன்.. ரொமான்ஸ் பண்ணனும்.. கீர்த்தி சுரேஷ் ஓப்பன் டாக்..!

தமிழில் தற்சமயம் பிரபலமான நடிகையாக இருந்து வரும் டாப் நடிகைகளில் முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் அவருக்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து தன்னுடைய நடிப்பு திறமையின் காரணமாக தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் கீர்த்தி சுரேஷ்.

ஆரம்பத்தில் புது நடிகர்களை போலவே கீர்த்தி சுரேஷ் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளானார். தொடரி, பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்த பொழுது கீர்த்தி சுரேஷ் நடிப்பு வெகுவாக விமர்சனத்திற்கு உள்ளானது.

கீர்த்தி சுரேஷ்

தொடர்ந்து அவர் ஒழுங்காக நடிப்பதில்லை என்றும் பேச்சுக்கள் இருந்து வந்தது. அந்த விமர்சனங்களை எல்லாம் உடைக்கும் வகையில் பிறகு மகாநதி என்னும் திரைப்படத்தில் நடித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரில் வெளியானது.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் கீர்த்தி சுரேஷ். அதனை தொடர்ந்து அவருக்கு நிறைய விருதுகளும் அந்த திரைப்படத்தின் மூலமாக கிடைத்தது.

இந்த நடிகருக்கு தங்கச்சியா

அதற்குப் பிறகு கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரிதாக விமர்சனத்திற்கு உள்ளாகவில்லை. பிறகு தமிழில் அவருக்கு கொஞ்சமாக மார்க்கெட் குறைய தொடங்கியது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்த தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்.

ஏனெனில் நடிகையர் திலகம் திரைப்படம் தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பிறகு அதுவரை தமிழ் சினிமாவில் பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காமல் இருந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவில் கவர்ச்சி காட்டி நடிக்க தொடங்கினார்.

ரொமான்ஸ் பண்ணனும்..

நடிகர் மகேஷ்பாபு கதாநாயகனாக நடித்த சர்காரி வாரிபட்டா திரைப்படத்தில்தான் முதன்முதலாக கொஞ்சமாக கவர்ச்சி காட்டி நடித்தார். ஆனால் அதற்கென்று பெரிதாக எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து பிறகு மீண்டும் சாதாரணமாகவே நடிக்க தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்.

இந்த நிலையில் அவருக்கு பெரிய நடிகர்களின் திரைப்படத்தில் தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அஜித்தை முதன்முதலில் சந்தித்த சம்பவத்தை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

அதில் கூறும் பொழுது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருந்தபோது அங்கு அஜித்தை எதிர்பாராத விதமாக சந்தித்தேன் அப்போது அவரை அழைத்து பக்கத்தில் நின்று பேசினேன் அது இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது என்று கூறினார் கீர்த்தி சுரேஷ். அப்போது அவரிடம் அஜித்துடன் தங்கையாக நடிப்பீர்களா என்று கீர்த்தி சுரேஷிடம் கேட்டதற்கு கண்டிப்பாக நடிக்க மாட்டேன் அஜித்தோடு எப்படி தங்கையாக நடிக்க முடியும் என்று கேட்டிருந்தார் கீர்த்தி சுரேஷ் .

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version