இந்த நடிகர் மீது கிரஷ் மட்டுமில்ல அதுக்கும் மேல.. கூச்சமின்றி கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திற்கு நடிகைகள் பிரபலமாவது என்பது ஒரு அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும். சினிமாவிற்கு வரும் எல்லா நடிகைகளுக்கும் அப்படியே அதிர்ஷ்டம் கிடைப்பது கிடையாது. ஆனால் ஒருமுறை மக்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டால் அதற்கு பிறகு அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் பஞ்சம் இருக்காது என்று கூறலாம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக தனது இரண்டாவது திரைப்படத்திலேயே மாறியவர் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு இரண்டாவது திரைப்படமான ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

நடிகை கீர்த்தி சுரேஷ்

இந்த  படம் முழுக்க கீர்த்தி சுரேஷை மிகவும் அழகாக அந்த திரைப்படத்தில் பார்க்க முடியும். அந்த படத்திலிருந்து கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் அதிகமாக துவங்கினார்கள். அதற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பு தொடர்பாக சில சர்ச்சைகள் உருவானது.

தொடரி, பைரவா மாதிரியான திரைப்படங்களில் எமோஷன்கள் அவ்வளவு சரியாக இல்லை என்று பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் அந்த பேச்சுக்களை உடைக்கும் வகையில் அடுத்து அவர் நடித்த திரைப்படம்தான் நடிகையர் திலகம்.

நடிகர் மீது கிரஷ் மட்டுமில்ல

நடிகையர் திலகம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிபடுத்தினார் கீர்த்தி சுரேஷ். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவரது நடிப்பை குறித்து பேசுவதையே ரசிகர்கள் விட்டு விட்டனர். மேலும் எப்போதும் அதிக வரவேற்பு பெற்று நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

சமீபத்தில் இவருடைய நடிப்பில் ரகு தாத்தா என்கிற திரைப்படம் திரையரங்கில் வெளியானது. ஆனால் தங்கலான் மற்றும் டிமான்டி காலனி 2 போன்ற திரைப்படங்களுடன் போட்டி போட்டு வெளியானதால் இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளே குறைவாக தான் கிடைத்தது.

கூச்சமின்றி கூறிய நடிகை

அதனால் நல்ல கதை அமைப்பு கொண்டிருந்தும் கூட பெரிதாக பேசப்படாத திரைப்படமாக ரகுதாத்தா திரைப்படம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கீர்த்தி சுரேஷ் பேசிக் கொண்டிருக்கும் பொழுது உங்களுடைய கிரஷ் என்று யாரை கூறுவீர்கள் என்று மேஜையில் இருக்கும் சில போட்டோக்களை எடுக்க சொன்னார்கள்.

அதில் அவர் போட்டோவை எடுத்த பொழுது அதில் தனுஷின் போட்டோ வந்தது. அதை பார்த்த கீர்த்தி சுரேஷ் தனுஷ் எனக்கு கிரஷ் என்பதையும் தாண்டி அதிகம் மரியாதையான ஒரு நபர் என்று கூற வேண்டும். அவர் மேல் எனக்கு மரியாதை அதிகமாக இருப்பதற்கு காரணம் அவர் பல திறமைகளை கொண்ட ஒரு நடிகர்.

ஒரு தயாரிப்பாளர், அதுமட்டுமின்றி இப்பொழுது படங்களையும் இயக்குகிறார், சர்வதேச அளவில் நடிகராக இருக்கிறார் அவரை  போன்ற ஒருவரை பார்க்க முடியாது என்று பதில் அளித்து இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version