என் மானத்தை வாங்கீடாத… அப்பா போட்ட ரூல்ஸ்..! உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்…

நடிகை கீர்த்தி சுரேஷை பொருத்தவரை தமிழ் சினிமாவில் தொடர்ந்து அவருக்கு மார்க்கெட் என்பது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் அதிக விமர்சனத்திற்கு உள்ளான ஒரு நடிகையாக இருந்தாலும் கூட பிறகு நடிப்பில் தான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து காட்டினார் கீர்த்தி சுரேஷ்.

சில பெண்கள் அதிக கவர்ச்சியாக நடித்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்பை பெறுவார்கள் ஆனால் கீர்த்தி சுரேஷை பொருத்தவரை ஆரம்பத்தில் இருந்து பெரிதாக கவர்ச்சி காட்டாமலேயே ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றார்.

என் மானத்தை வாங்கீடாத

ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் மக்களுக்கு பிடித்த படமாகவே இருந்தது. மேலும் அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் மிகவும் அழகாகவே காட்டப்பட்டார்.

அதற்கு பிறகு வந்த தொடரி மாதிரியான திரைப்படங்களில்தான் விமர்சனத்திற்கு உள்ளானார். தொடரி திரைப்படத்தில் அவர் ஒழுங்காக நடிக்கவில்லை என்றும் அவர் மீது குற்றச்சாட்டு இருந்தது. அதற்குப் பிறகுதான் கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு அதிக முக்கியத்துவம் காட்டத் துவங்கினார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் உண்டு.

அப்பா போட்ட ரூல்ஸ்

நடிகையர் திலகம் திரைப்படத்தில் நடித்த பிறகு கீர்த்தி சுரேஷிற்கு தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வரவேற்புகள் அதிகமானது. ஆனால் தமிழ் சினிமாவில் இருந்தவரை பெரிதாக கவர்ச்சி காட்டி நடிக்காமல் இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

தெலுங்கு சினிமாவிற்கு சென்ற பிறகு கொஞ்சமாக கவர்ச்சி காட்ட துவங்கினார். நடிகர் மகேஷ் பாபு நடித்த சர்க்காரி வாரிபட்டா திரைப்படத்தில் கொஞ்சமாக கவர்ச்சி காட்டி நடித்தார் கீர்த்தி சுரேஷ். அந்த திரைப்படம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

உண்மையை கூறிய கீர்த்தி சுரேஷ்

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து கவர்ச்சி காட்டி நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்திற்கு தேவை என்றால் மட்டும்தான் கவர்ச்சி காட்டி நடிப்பேன் என்கிற நிலையில்தான் இப்பொழுதும் கீர்த்தி சுரேஷ் இருக்கிறார்.

அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு அது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியிலும் கூறியிருந்தார் கீர்த்தி சுரேஷ். அதில் அவர் கூறும் பொழுது நான் நடிக்கப் போகிறேன் என்று தெரிந்ததுமே எனது அம்மா எனக்கு இரண்டு அறிவுரைகளை கொடுத்தார்.

அதில் ஒன்று நேரத்தை சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும். இன்னொன்று இயக்குனர் முதல் யூனிட் பாய் வரை வேலை பார்க்கும் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றார்.

அதேபோல அப்பா என்னிடம் கூறும் பொழுது ”நான் நல்ல பேரை சம்பாதித்து வைத்திருக்கிறேன் மானத்தை வாங்கிடாத” என்று கூறினார் என்று அந்த நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இதனால்தான் கீர்த்தி சுரேஷ் கண்ணியமான கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam