“என்ன கன்றாவி இது மேல புடவை.. கீழ பேண்ட்..’’ கிறுகிறுக்க வைத்த கீர்த்தி பாண்டியன்..

நடிகர் அருண்பாண்டியனுக்கு 3 மகள்கள். அவர்களில் ஒரு மகள் கீர்த்தி பாண்டியன். இவரது பெரியப்பா மகள் ரம்யா பாண்டியன். இருவரும் சகோதரிகள். இருவருமே சினிமாவில் நடித்து வருகின்றனர்.

கடந்த 1980, 90களில் பல படங்களில் நடித்தவர் அருண்பாண்டியன். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர், ஒரு கட்டத்துக்கு பிறகு வில்லன் கேரக்டர்களிலும் நடித்தார்.

நடிகர் விஜயகாந்துக்கு, அருண் பாண்டியன் நெருங்கிய நண்பர். அதனால் தனது பல படங்களில் அருண்பாண்டியனுக்கு நடிக்க வாய்ப்பளித்தவர் விஜயகாந்த்.

அதுமட்டுமின்றி தேசிய முற்போக்கு திராவிட கழகம் துவங்கிய பிறகு, தனது கட்சியில் எம்எல்ஏவாக்கி அருண்பாண்டியனை அழகுபார்த்தவர் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி செல்வாக்கு மிக்க தனது அப்பா அருண்பாண்டியன் புகழ்பெற்ற சினிமாவில், தானும் சாதிக்க வேண்டும் என்ற ஆசையில் தனது சினிமா பயணத்தை துவங்கியிருக்கிறார்.

கீர்த்தி பாண்டியன்

கடந்த 2019ம் ஆண்டில், இயக்குநர் ஹரிஷ்ராம் இயக்கத்தில் தும்பா என்ற படத்தில் கீர்த்தி பாண்டியன் அறிமுகமானார். அடுத்து 2021ம் ஆண்டில் அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்து, கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, பலரது பாராட்டை பெற்றார்.

தும்பா படத்தில் சிறப்பான நடிப்பை வழங்கியதற்காக பெமினாவின் சூப்பர் மகள் என்ற விருதும் இவளுக்கு கிடைத்துள்ளது.

நடிகர் முனீஸ்காந்துடன் போஸ்ட்மேன் என்ற வெப் சீரிஸ் ஒன்றிலும் கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கிறார்.

சகோதரி ரம்யா பாண்டியன்

கீர்த்தி பாண்டியனுக்கு இரண்டு சகோதரிகள் இருக்கின்றனர். கவிதா பாண்டியன், கிரணா பாண்டியன் என்ற அவர்கள் இரண்டு பேரும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வமில்லாதவர்களாக உள்ளனர்.

ஆனால் பெரியப்பா மகள் சகோதரி ரம்யா பாண்டியன் நடிகையாக இருக்கிறார்.

கீர்த்தி பாண்டியன், நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகும் கீர்த்தி பாண்டியன் சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் கடந்தாண்டு, கண்ணகி என்ற படம் வெளியானது.

அசோக் செல்வன் திருமணம்

நீண்டகாலமாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் இருவரது வீட்டிலும் பேசி சம்மதம் பெற்று, இருவீட்டார் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

அசோக் செல்வன் திருமணத்துக்கு பிறகும், பிஸியாக நடித்து வருகிறார். ஆனால் கீர்த்தி பாண்டியனுக்கு பெரிய அளவில் படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லை.

சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் கீர்த்தி பாண்டியன் அடிக்கடி தனது புகைப்படங்களை அப்டேட் செய்து வருகிறார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ஆனால் அவர் சமீபத்தில் அவர் பேண்ட் போன்ற கீழ் ஆடையும், இடுப்புக்கு மேலே புடவை போன்றும் ஒரு வித்யாசமான டிரஸ்சில் வெளியிட்டுள்ள புகைப்படம், கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

அந்த புகைப்படங்களை பார்க்கும் சினிமா ரசிகர்கள், “என்ன கன்றாவி இது மேல புடவை.. கீழ பேண்ட்..’’ இப்படி கிறுகிறுக்க வைத்த கீர்த்தி பாண்டியன் மீது ஏகப்பட்ட கடுப்பில், கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version