நடிகர் அருண்பாண்டியன் அவர்களின் மகள் கீர்த்தி பாண்டியன் தமிழில் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், இவர் நடித்த படங்கள் எதுவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனது கிடையாது.
ஏதாவது சர்ச்சையாக பேசி அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய பெயர் அடிபடுவது போல பார்த்துக் கொள்வார்.
அந்த வகையில், சமீபத்தில் கூட ராமர் கோயில் திறப்பு நாள் அன்று நடைபெற்ற ப்ளூ ஸ்டார் என்ற படத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய கீர்த்தி பாண்டியன் அந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை பாடி படத்திற்கு பிரமோஷன் செய்தார்.
காலு மேல கால போடு ராவண குலமே என்ற பாடல் வரிகளை பாடியிருந்தார். ராமர் கோயில் திறப்பு என்று ராவணனை போற்று விதமாக மேடையில் பாடலை பாடிவிட்டார் கீர்த்தி பாண்டியன் என ஆகா ஓகோ என இணைய பக்கங்களில் நாத்திகவாதிகள் இவரை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.
அந்த நாத்திகர்கள் ராமரை இல்லை என்பார்கள்.. ராவணனை உண்மை என்று கொண்டாடுவார்கள்.. அது சரி.. இந்த கோளாறான சப்ஜெக்டுக்குள் நாம் செல்ல வேண்டாம். விஷயத்துக்கு வருவோம்..
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி பாண்டியன் படப்பிடிப்பு தளங்களுக்கு செல்லும் பொழுது அல்லது வெளியே எங்கேயாவது பயணப்படும் பொழுது கழிவறை அசுத்தமாக இருக்கும், டாய்லெட் சீட் உட்கார முடியாத அளவுக்கு மோசமானதாக இருக்கும்.
ஒரு மாதிரி கூச்ச உணர்வு ஏற்படும், அருவருப்பாக இருக்கும்.. கண்டிப்பாக அதில் அமர்ந்து சிறுநீர் கழித்தால் தோல் வியாதிகள்.. அல்லது ஏதேனும் தொற்று நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கிறது.
எனவே அப்படியான நேரங்களில்.. கழிவறைகளை பயன்படுத்த பிடிக்காத நேரங்களில். நான் என் வசம் வைத்திருக்கக் கூடிய இந்த Stand and Pee அட்டையை பயன்படுத்தி நின்ற படியே சிறுநீர் கழிப்பேன்.
அதற்கு இந்த அட்டை வசதியாக இருக்கிறது. பெண்கள் வெளியே அடிக்கடி செல்லும் பொழுது அல்லது ஏதேனும் சுற்றுலா செல்லும் பொழுது தொலைதூரங்களுக்கு பயணப்படும் பொழுது இப்படியான அட்டைகளை அவர்களுடைய ஹேண்ட் பேக்கில் வைத்திருந்தால் அவர்கள் எந்த ஒரு நோய் தொற்றுக்கும் ஆளாகாமல் சிறுநீர் கழிக்க முடியும் என அறிவுரையும் கொடுத்திருக்கிறார் கீர்த்தி பாண்டியன்.
இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.