சினிமாவில் ஹீரோக்களை பொறுத்தவரை 70 வயதானாலும் அவர்கள் ஹீரோவாக தான் இருக்கிறார்கள். வழுக்கை விழுந்த தலைக்கு விக் வைத்துக் கொண்டு கேமரா முன் வந்து இளைஞராக நின்று விடுகின்றனர்.
ஆனால் நடிகைகள், நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே மார்க்கெட் இழந்து விடுகின்றனர். நயன்தாரா, திரிஷா போன்ற சில நடிகைகள் மட்டுமே விதிவிலக்காக 10, 20 வருடங்கள் நடித்த பிறகும், ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.
அக்காவாக…
மற்றபடி பல நடிகைகள் ஹீரோக்களின் அக்காவாக, அம்மாவாக, மாமியாராக நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். இப்போது கூட நடிகை நயன்தாரா, கீத்து மோகன்தாஸ் இயக்கும் டாக்ஸிக் என்ற படத்தில், கேஜிஎஃப் ஹீரோ நடிகர் யாஷூக்கு அக்காவாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக ரூ. 20 கோடி சம்பளம் வாங்குகிறார்.
இன்னும் சில ஆண்டுகளில் நடிகை திரிஷாவும், யாரேனும் ஒரு இளம் நாயகனுக்கு அக்காவாக நடிக்க அதிக வாய்ப்புள்ளது. இதுதான் தமிழ் சினிமாவின் யதார்த்த சூழ்நிலை.
கார்த்தி
நடிகர் கார்த்தி, சீனியர் நடிகர் சிவகுமாரின் மகன். நடிகர் சூரியாவின் தம்பி என்ற அடையாளத்துடன் பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், அங்கீகாரத்தையும் பெற்றவர் நடிகர் கார்த்தி. அவரை பருத்தி வீரனாக ஒரு கேரக்டரில் வாழவைத்து, சிறந்த நடிகராக அடையாளப்படுத்தியவர் டைரக்டர் அமீர்.
தொடர்ந்து இதுவரை நடிகர் கார்த்தி 25 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அவரது 25 வது படம்தான் ஜப்பான். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியானது. ஜோக்கர் பட இயக்குனர் ராஜூமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ஜப்பான் படம், யாரும் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்தது.
மோசமான தோல்வி படம்
கார்த்தி இதுவைர நடித்த படங்களிலேயே, மிக மோசமான தோல்வி படமாக ஜப்பான் அமைந்தது. இந்த படம் கார்த்தியின் திரை பயணத்தில் மிக மோசமான அடையாளமாக இருந்தது.
அதே நேரத்தில் கார்த்தி நடித்த கைதி சர்தார், தோழா, தீரன் அதிகாரம் 1, கொம்பன், கடைக்குட்டி சிங்கம், அலெக்ஸ் பாண்டியன், சிறுத்தை போன்ற பல படங்கள் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்து, அவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உயர்த்தியது என்றால்.
வா வாத்தியாரே
ஜப்பான் படத்தை தொடர்ந்து, தற்போது கார்த்தி இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியாரே என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் 20 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
கீர்த்தி ஷெட்டி
வா வாத்தியாரே படத்தில் 20 வயதான கீர்த்தி ஷெட்டி படத்தின் நாயகியாக நடிக்கிறார். இவர் கார்த்தியை விட 26 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் சிவாஜி, ரஜினி கமல் போன்றவர்கள்தான் தங்களை விட 25, 30 வயது குறைவான இளம் நடிகைகளுடன் ஜோடியாக நடித்தனர். ஆனால் இப்போதும் அது கார்த்தி ஹீரோவாக நடிக்கும் காலகட்டத்திலும் தொடர்கிறது.
26 வயசு மூத்த நடிகருடன் ரொமான்ஸ்
என்னதான் ஹீரோவாக இருந்தாலும், தன்னை விட 26 வயசு மூத்த நடிகர் கார்த்தியுடன் கீர்த்தி ஷெட்டி ரொமான்ஸ் பண்ணுவது குறித்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.