இதுக்காக தான் கீர்த்தி சுரேஷ் ‘வெயிட்’ குறைச்சாங்களா? – எப்படியோ உண்மை தெரிஞ்சு போச்சு

தமிழ் சினிமாவில் கொழுக் மொழுக் நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ். பைரவா, சண்டக்கோழி 2, நடிகையர் திலகம், சர்கார், ரஜினி முருகன், ரெமோ படங்களில் சற்று புஷ்டியாக மிக அழகாக காணப்பட்ட கீர்த்தி சுரேஷ், அண்ணாத்த படத்தில் நடித்த போது, மிகவும் ஒல்லியாக, இளைத்த நிலையில் முக அடையாளமே மாறிய நிலையில் காணப்பட்டார். இது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இன்று நானியுடன், கீர்த்தி சுரேஷ் நடித்த தசரா படம் வெளியாகிறது. இதில் வெண்ணிலா என்ற கேரக்டரில் தெலுங்கு பேசும் பெண்ணாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் இந்த கேரக்டருக்காக, கீர்த்தி சுரேஷை ஒல்லியாகும்படி, படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா அறிவுறுத்தியுள்ளார். எனவே, தனது உடல் எடையில் 12 கிலோவை குறைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ரஜினிக்கு தங்கையாக நடித்த கீர்த்தி சுரேஷ். அடுத்து சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கிறார். தமிழில் அஜித் நடித்த வேதாளம் படத்தில், அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். அஜித் கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கும் தெலுங்கு ரீமேக் படமான போலோ சங்கர் படத்தில், கீர்த்தி சுரேஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழில் ரஜினிக்கு, தெலுங்கில் சிரஞ்சீவிக்கு என, சூப்பர் ஸ்டார்களின் தங்கையாக மாறி விட்டார் கீர்த்தி சுரேஷ்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …