“சக நடிகைகள் என்னிடம் இதை கூறியுள்ளார்கள்…” – கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

பொதுவாக சினிமா நடிகைகள் தங்கள் மீது ஏற்பட்ட பாலியல் கொடுமைகள் மற்றும் சீண்டல்கள் குறித்து அவ்வப்போது மீடியாவில் பேசி சர்ச்சையை கிளப்புவது வாடிக்கை.

பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக பல நடிகைகளை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இது குறித்து தன்னுடைய பதிலை கொடுத்திருக்கிறார்.

தென்னிந்தியாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அவர் வெளிப்படையாக தன்னுடைய பதில் கொடுத்திருக்கிறார்.

சினிமாவில் எனக்கு இதுவரை பாலியல்ரீதியான தொந்தரவு வந்தது கிடையாது. ஏனென்றால் நான் யார் என்னுடைய பின்புலம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால். என்னுடன் பயணிக்கக்கூடிய என்னுடன் நடிக்க கூடிய சக நடிகைகள் என்னிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்து பகிரங்கமாக விவாதித்திருக்கிறார்கள்.

ஆனால், அது போன்ற எதையும் நான் இதுவரை அனுபவிக்கவில்லை. எல்லோருக்குமே நன்கு அறிமுகமானவள். எனவே யாரும் என்னை தவறான முறையில் அணுகவில்லை. எதிர்காலத்தில் அப்படி ஒன்று நடக்குமா என்றால்..? அதற்கு வாய்ப்பே இல்லை.

ஒருவேளை அது போல எனக்கு தொந்தரவுகள் நடக்கும்.. படுக்கையை பகிர்ந்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும்.. என்ற சூழ்நிலை வந்தால் நான் சினிமாவிலேயே இருக்க மாட்டேன் வேறு தொழிலை பார்த்துக்கொண்டு சினிமாத்துறைக்கு டாட்டா சொல்லி விடுவேன் என்று கூறியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

இவருடைய இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. பட வாய்ப்புக்காக ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்து.. அதனை நான் ஏற்றுக்கொண்டால் தான் படத்தின் வாய்ப்பு கிடைக்கும் என்றால்.. அந்த வாய்ப்பையே நிராகரிப்பேன். திரைப்படத்தில் நடிப்பதை விட்டுவிட்டு வேறு வேலைக்கு சென்று விடுவேன் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் பேசியுள்ள இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version