ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்.. அவசரமாக பறந்து சென்ற STR..! – பரபரக்கும் கோலிவுட்..!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களில் நடித்தவர் கீர்த்தி சுரேஷ். குறிப்பாக நடிகையர் திலகம் படத்தில், நடிகை சாவித்திரி கேரக்டரில் நடித்திருந்தார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.

நடிகர் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். விஜய், தனுஷ், சியான் விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், கடைசியாக தமிழில் நடித்து வெளியான படம் மாமன்னன்.

இப்போது ஜெயம் ரவியுடன் சைரன் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ்

இதற்கிடையே சிம்பு 48 படத்தில், சிலம்பரசனுக்கு வில்லன், கதாநாயகன் என இரண்டு ரோல்கள். இதில் ஒருவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார்.

சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க ஓகே சொன்ன கீர்த்தி சுரேஷ், அதை மறைமுகமாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் அதை கூறியிருந்தார்.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்
போஸ்டர் கடந்த 2ம் தேதி வெளியானது. கதாநாயகன், வில்லன் என இரண்டு கேரக்டர்களில் சிம்பு நடிக்கிறார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை டைரக்ட் செய்கிறார்.

சிம்பு நடிக்கும் இந்த படத்தில் ஏற்கனவே ரஜினி நடிப்பதாக இருந்துள்ளது. கதையும் அவருக்கு மிக பிடித்துப் போயுள்ளது. ஆனால் கடைசியில் ரஜினி நடிக்காததால், அதில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ், மிருணாள் தாகூர் என இருவரும் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க செலக்சன் செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து பறந்த எஸ்டிஆர்

இந்நிலையில் தற்போது சிம்பு, தாய்லாந்தில் இருக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்புக்காக தான் அங்கு சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

சிம்புவை தொடர்ந்து படக்குழுவும், விரைவில் பாங்காங் செல்ல இருக்கிறது.

ராஜா தேசிங்கு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஓகே சொல்லி இருக்கிறார்.

அதனால்தான் அவசரமாகSTR. – பறந்து சென்றதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version