நான் என்ன உன் பொண்டாட்டியா..? உச்ச கட்ட கடுப்பில் கீர்த்தி சுரேஷ்..!

பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழ் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்து பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார்.

அவரின் அம்மா மற்றும் பாட்டி திரைப்படத்துறையில் நடிகையாக இருந்து வந்தால் இவர் மிகச் சுலபமாக நடிகையாகிவிட்டார்.

கீர்த்தி சுரேஷ்:

ஆனால் வாய்ப்புகள் சுலபமாக கிடைத்துவிட்டாலும் தனது திறமையின் மூலமாக தான் இவர் நிலைத்து நிற்கிறார் என்றால் அது மிகையாகாது .

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த அவர் முதன்முதலில் அறிமுகமான படம் தமிழில் இது என்ன மாயம் திரைப்படம் தான்.

அதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா ,தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி 2, சீமராஜா, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார் .

வெற்றிப்படங்கள்:

குறிப்பாக மிக குறுகிய காலத்திலேயே அடுத்த அடுத்த தொடர்ச்சியாக வெற்றி படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.

தமிழை தாண்டி அவர் தெலுங்கிலும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அங்கு மகாநடி திரைப்படத்தில் நடித்ததில் இருந்தே கீர்த்தி சுரேஷ் மவுஸ் மிகப்பெரிய அளவில் அதிகரித்துவிட்டது.

அந்த திரைப்படத்தின் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கொடுத்து கவுரவிக்கப்பட்டது.

இப்படியாக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ரசிகர்களால் தனக்கு ஏற்பட்ட தொல்லை குறித்தும் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆனது ஆளானதை பற்றியும் பேட்டிகளில் கூறியிருக்கிறார்.

ரசிகர்கள் எல்லை மீறி செல்வது ஒரு கட்டத்தில் தங்களுக்கு ஒரு விதமான மன உளைச்சலை தருகிறது என கூறினார்.

அப்படித்தான் ரசிகர் ஒருவர் என்னை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படின்னு சொல்லி அடிக்கடி எனக்கு லெட்டர் போட்டுக்கிட்டே இருந்தார்.

பொண்டாட்டி மாதிரி பேசுறாங்க:

அவர் என்கிட்ட இருந்து பதில் கடிதத்தை எதிர்பார்ப்பார். மேலும் ஒரு மேலும் ஒரு ரசிகர் என்னுடைய வீடு தேடியே வந்துட்டு. என்னை பார்க்கத் துடித்துக் கொண்டிருந்தார் .

அவர் கொஞ்சம் வேற மாதிரி இருந்தாரு அப்ப நான் வீட்ல கூட இல்ல வீட்ல வேலை செய்றவங்க தான் இருந்திருக்காங்க .

அவங்க கிட்ட போய் ஏன் கீர்த்தி இந்த படம் எல்லாம் பண்றா அந்த படம் எல்லாம் பண்றா அப்படி இப்படின்னு ரொம்ப உரிமையா வாடி போடின்னு திட்டி பேசி இருக்காரு.

நான் ஏதோ அவருக்கு வைஃப் மாதிரி அவ்வளவு உரிமை எடுத்து பேசி இருக்காரு. இதெல்லாம் கேட்டபோது எனக்கு ஒரு மாதிரி மன உளைச்சலையை கொடுத்துடுச்சு .

நான் என்ன உங்க பொண்டாட்டியா? எதுக்கு இவ்வளவு அட்வான்டேஜ் எடுத்துக்கணும்? என்று அந்த ரசிகர் மீது கடும் கோபத்தை கக்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version