மலையாளத் திரைப்படங்களில் அதிக அளவு நடித்த நடிகையான மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் ஆரம்ப காலத்தில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.
இதனை அடுத்து மலையாள திரைப்படமான கீதாஞ்சலி எனும் திரைப்படத்தில் 2013 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் நடிக்க கூடிய வாய்ப்பு அவருக்கு வந்து சேர்ந்தது.
சைரன் படத்தில் கீர்த்தி சுரேஷ்..
அந்த வகையில் தமிழ் திரைப்படமான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் வாரிசு நடிகரான விக்ரம் பிரபு நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு தென்னிந்தியாவை பொறுத்த வரை அதிகளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
முதல் படத்திலேயே அற்புதம் நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்து தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பொன்ராம் இயக்கத்தில் வெளி வந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் கார்த்திகா என்ற கேரக்டரை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனை அடுத்து தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சாமி 2 போன்ற தமிழ் படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வர ஆரம்பித்தார்.
சிறப்பான நடிப்பிற்கு ஏசியாநெட் விருது முதல் படமான கீதாஞ்சலி படத்திற்கு கிடைத்தது. அத்தோடு மகாநதி என்ற தெலுங்கு படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரியின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததை அடுத்து மிகச்சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருதைப் பெற்றார்.
தற்போது இவர் ஜெயம் ரவியோடு இணைந்து சைரன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் நடித்திருந்த கேரக்டர் ரோலை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தற்போது அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள்.
கதறும் ரசிகர்கள்..
ஏற்கனவே இவர் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்து அனைவரது மனதையும் கவர்ந்த இவர் கூடுதல் கவர்ச்சி காட்டாமல் திரைப்படங்களில் ஹோம்லியான லுக்கில் நடித்து வருவது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும்.
அந்த வகையில் இவர் இதுவரை ஏற்று நடித்திராத கதாபாத்திரத்தை தற்போது ஏற்று நடித்ததின் காரணம் என்ன என்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.
ஒருவேளை இவர் மார்க்கெட் சரிவில் இருந்து தப்பித்துக் கொள்ள எந்த கேரக்டரையும் செய்ய துணிந்து விட்டாரா? என்ற கேள்விகளை சைரன் படத்தில் நடித்திருக்கும் கேரக்டர் மூலம் எழுந்து உள்ளது.
இந்த சைரன் திரைப்படத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் இந்த படம் வெளிவர உள்ளது. இறைவன் படம் ஜெயம் ரவிக்கு கை கொடுக்காத சூழ்நிலையில் இந்த படத்தில் கட்டாய வெற்றியை நிலை நிறுத்தக்கூடிய சூழ்நிலையில் ஜெயம் ரவி இருக்கிறார்.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்டோ நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார்.
மேலும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஜெயம் ரவிக்கு மகளாக நடித்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் ஹீரோயினியாக நடித்திருக்கிறார்.
இதனைப் பார்த்து தான் தற்போது ரசிகர்கள் அனைவரும் கதறி வருவதோடு என்ன ஆச்சு.. கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் ஜெயம் ரவிக்கு எப்படி மகளாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்று கேட்டிருப்பதோடு ஏசப்பா என்ன கொடுமை.. என்று கதறி வருகிறார்கள்.