அட கொடுமைய.. தன் அம்மா குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கொடுத்த பதில்.. பங்கம் பண்ணும் ரசிகர்கள்..

மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிக நல்ல நடிப்பு திறமை மிக்க, அழகான நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷ்

அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க வேண்டும் என்பதற்காக, பொன்னியின் செல்வன் படத்திலும், தெலுங்கில் சிரஞ்சீவி படத்தில் நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்தவர்.ஆனால் அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பைரவா, சர்க்கார் படங்களுடன் விஜயுடன் நடித்த கீர்த்தி சுரேஷ், சியான் விக்ரமுடன் சாமி 2 படத்தில் நடித்திருந்தார். இந்த படங்களில் நடித்த போது நடிகர் விஜய்க்கும், கீர்த்தி சுரேஷ்க்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் தொடரி படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ, ரஜினி முருகன் ஆகிய 2 படங்களுமே மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தது.

நடிகையர் திலகம்

மறைந்த நடிகையர் திலகம் வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட நடிகையர் திலகம் படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ் பல விருதுகளை பெற்றார். இளம் வயதில் சாவித்திரி கேரக்டரில் மிக அழுத்தமான ஒரு நடிப்பை வழங்கியிருந்தார் கீர்த்தி சுரேஷ்.

நடிகர் தனுஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் இருவரும் ஒரு நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி, கீர்த்தி சுரேஷிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

இதையும் படியுங்கள்: “கவர்ச்சி நடிகையாகும் முயற்சியில் இருக்கும் பெண்கள்.. இதை மறந்துடாதிங்க..” நடிகை சோனா பகீர்..!

அம்மா நடித்த படங்கள்

அதாவது தமிழில் உங்க அம்மா மேனகா நடித்த இரண்டு படங்களின் பெயர்களை சொல்லுங்கள் என்கிறார். உடனே அதற்கு கீர்த்தி சுரேஷ், அம்மாவா தமிழில் நடித்திருக்கிறாரா, தெரியலையே என விழிக்கிறார்.

அதற்கு நெற்றிக்கண் படம் என்று நினைக்கிறேன் என்று அருகில் இருக்கும் தனுஷ் பதில் சொல்கிறார். மற்றொரு படம் என அவரும் யோசிக்க டிடியே, நெற்றிக்கண், நிஜங்கள் என்ற படங்களில் நடித்திருக்கிறார் என்று கூறுகிறார்.

அம்மா வருத்தப்படுவாங்க…

அதுக்கு கீர்த்தி சுரேஷ், நான் தெரிஞ்ச மாதிரி சொல்லவா, இதை பார்த்த அம்மா வருத்தப்படுவாங்க என கீர்த்தி சுரேஷ் சொல்ல, அதைக்கேட்டு டிடியும், தனுஷூம் பயங்கரமாக சிரிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்: நான் ஒன்னும் விரல் சூப்பும் பப்பா இல்ல.. கவர்ச்சியில் மிரட்டும் வீரம் யுவீனா.. தீயாய் பரவும் போட்டோஸ்..

பிறகு மீண்டும் டிடி அம்மா நடித்த இரண்டு தமிழ் படங்கள் என்று கேட்க, நெற்றிக்கண், நிஜங்கள் என்று அவர் பதில் சொல்ல, அடேங்கப்பா என்ன நாலேட்ஜ் உங்களுக்கு, இப்படி உடனே பதில் சொல்றீங்க, டிடி பாராட்டுவது போன்ற அந்த வீடியோ கிளிப் இப்போது வைரலாகி வருகிறது.

இதெல்லாம் ஒரு பொழப்பா

அட கொடுமைய.. தன் அம்மா நடித்த தமிழ் படங்களின் பெயர்கள் குறித்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் தெரியலையே என்ற பதிலை சொல்லிவிட்டு, பிறகு நான் தெரிஞ்ச மாதிரி சொல்றேன் என்று கூறுவதையும் இந்த வீடியோவில் பார்த்த ரசிகர்கள், இதெல்லாம் ஒரு பொழப்பா என பங்கம் பண்ணுகின்றனர்.

https://www.youtube.com/watch?v=k-Z7gjS3I2s

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version