நடிகை கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) தன்னுடைய முதல் ஆண் நண்பன் என்று அடிக்கடி கூறும் தன்னுடைய செல்ல நாய்க்குட்டி நைக்கி உடன் படுக்கையில் இருந்தபடி மாம்பழத்தை பிதுக்கி சுவைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கீர்த்தி சுரேஷ் ( keerthy suresh ) என்ற பெயரை அறியாத நபர்கள் தமிழகத்தில் இருக்க மாட்டார்கள் இல்லை இல்லை இந்தியாவிலேயே இருக்க மாட்டார்கள் ஏனென்றால் அந்த அளவிற்கு அம்முனி பிரபலமன நடிகை.
கேரளாவை பிறப்பிடமாக கொண்ட கீர்த்தி சுரேஷ் அக்டோபர் 17 1992ல் பிறந்துள்ளார். கலை குடும்பத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ் தனது சிறுவயதிலிருந்து நடிப்பதிலும் டான்ஸ் ஆடுவதிலும் ஆர்வமாக இருந்துள்ளார்.
Keerthy Sureshசிறுவயதில் இருந்தே மலையாள திரைப்படங்களில் குழந்தை வேடங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வந்த கீர்த்தி சுரேஷ் 2015ம் ஆண்டு தமிழில் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறையில் கதாநாயகியாக காலடி எடுத்து வைத்தார்.
இதன் பிறகு ரஜினி முருகன் என்னும் மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்து தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டார்.
Keerthy Sureshஇதன் பிறகு முன்னணி கதாநாயகியாக மாறிய கீர்த்தி சுரேஷ் தனுஷ் நடித்த தொடரி திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்தார் பின்பு ரெமோ பாம்பு சட்டை போன்ற படங்களில் நடித்த இவர் தளபதி விஜய் உடன் இணைந்து பைரவா திரைப்படத்தில் நடித்தார்.
Keerthy Sureshபின்பு ஆந்திரா கேரளா தமிழ்நாடு என அனைத்து மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகைகளில் முக்கியமான நடிகையாக மாறினார் இவ்வளவு பிரபலமான நடிகையாக இருந்தாலும் அம்மணி அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்டியதே இல்லை.
Keerthy Sureshஅதுவே கீர்த்தி சுரேஷின் பலமாகவும் இருந்தது போகப் போக அதுவே பலவீனமாகவும் மாறியது ரசிகர்களிடையே கீர்த்தி சுரேஷ் ஒரே மாதிரி குடும்பப்பாங்கான கேரக்டரில் மட்டுமே நடிப்பது போன்று சலிப்பு தட்டியதாக உணர்ந்தர்.
Keerthy Sureshஅதை புரிந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் அனைத்து படங்களிலும் கவர்ச்சி காட்ட தொடங்கியது மட்டும் இல்லாமல் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்ன் உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் தந்தார்.
Keerthy Sureshஇதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி.. கீர்த்தி.. என்று பைத்தியம் பிடிக்காத குறையாக லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளிக் குவித்து வருகின்றனர்.