என் அப்பாவே என் மீது சந்தேகப்பட்டார்.. நம்பிக்கையே இல்ல.. ஆனால்.. ரகசியம் உடைத்த கீர்த்தி சுரேஷ்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக, முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் மற்றும் மலையாளத்தில் அதிக படங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் ரஜினிகாந்த் சகோதரியாக, சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார்.

விஜயுடன் பைரவா, சர்க்கார் படங்களில் நடித்திருந்தார். ரஜினி மற்றும் விஜயுடன் நடித்த இந்த 3 படங்களுமே கீர்த்தி சுரேஷூக்கு பெரிய அளவில் வெற்றியை தரவில்லை.

ஆனால் சிவகார்த்திகேயனுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினி முருகன், ரெமோ ஆகிய இரண்டு படங்களும் நல்ல வெற்றியை தந்தன. நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் அவருக்கு பெற்றுத் தந்தது.

தனுஷ் உடன் தொடரி, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்தார். சாவித்திரி வாழ்க்கை வரலாறு படமான நடிகையர் திலகம் படத்தில், சிறந்த நடிப்பை வழங்கி, தேசிய விருது பெற்றார்.

கீர்த்தி சுரேஷ்

இப்போது ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள சைரன் படத்தில், கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரி கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோ நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றும் வருகிறார்.

பாலிவுட் நாயகன் வருண் தவான் என்பவருடன் இந்தி படம் ஒன்றில் நடித்துவரும் கீர்த்தி சுரேஷ், அடிக்கடி முக்கிய நடிகர்களுடன் கிசுகிசுக்கப்படுவதும் வழக்கமாக நடந்து வருகிறது.

முதலில் பைரவா படத்தில் நடித்த போது நடிகர் விஜயுடன் இணைத்து பேசப்பட்டார். அடுத்து, இசையமைப்பாளர் அனிருத்தை கீர்த்தி சுரேஷ், திருமணம் செய்வதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

இப்போது உறவினர் ஒருவருடன் அவர் நெருக்கமாக இருப்பதாக கூறப்படுகிறது/

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிளாப் படங்களில் நடித்ததால், அடுத்து பாலிவுட் பக்கம் தனது நடிப்பு திறமைக்கு உரிய வரவேற்பு கிடைக்குமா, என்ற எதிர்பார்ப்பில் கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார்.

சினிமாவில் நடிக்க ஆசை…

இதற்கிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய கீர்த்தி சுரேஷ், தனது இளமை காலத்தில் நடந்த விஷயங்களை வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

என்னுடைய அக்கா, அமெரிக்கா சென்று படித்தார். என்னையும் அப்படி அமெரிக்காவில் படிக்க வைக்க என் அப்பா ஆசைப்பட்டார். ஆனால் நான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன்.

அமெரிக்கா சென்றால், சினிமாவில் நடிக்க முடியாது என்பதால் நான் அமெரிக்கா செல்லாமல் இருந்து விட்டேன். இந்த விஷயத்தில் அப்படியே டிமிக்கி கொடுத்து எஸ்கேப் ஆகி விட்டேன்.

அப்பாவுக்கு சந்தேகம்

நான் சினிமாவில் நடித்து வெற்றி பெறுவேன் என்று, என் மீது என் அப்பாவுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. இவள் எங்கே சினிமா நடிக்க போகிறாள் என்று என் அப்பா என் மீது சந்தேகப்பட்டார்.

சினிமாவில் நடித்து வெற்றி பெறாவிட்டால், இவளது எதிர்காலம் என்னாகும் என்ற கவலையும் என் அப்பாவுக்கு என் மீது இருந்தது. அதனால் எனக்கு சினிமாவே வேண்டாம் என்று கூறிவிட்டார்.

ஆனால் அமெரிக்காவில் இருந்து வந்த என் அக்கா, எனக்கு ஆதரவாக இருந்து அப்பாவிடம் பேசி, நான் சினிமாவில் நடிக்க அப்பாவை சம்மதிக்க வைத்தார்.

நான் இந்த கலைத்துறையில் முன்னேற என் அக்கா தான் காரணம். நான் நன்றாக நடிப்பேனா என்று என் அப்பாவே என் மீது சந்தேகப்பட்டார்.

என் நடிப்பு மீது அவருக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால் அக்கா ஆதரவு எனக்கு இருந்ததால் சாதிக்க முடிந்தது என்று கீர்த்தி சுரேஷ் தனது கடந்த கால வாழ்க்கை ரகசிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version