ச்சீ என்ன கருமம் இது? ஐஸ்க்ரீம் பஜ்ஜியால் அதிர்ந்துப்போன கீர்த்தி சுரேஷ்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்தவரும் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான பிரபலமான நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

கேரளா மாநிலம் சொந்த ஊராகக் கொண்ட கீர்த்தி சுரேஷ் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் என்பதால் தமிழ் சினிமாவிலும் தமிழ் மொழி பேசும் நடிகையாகவும் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ்:

இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு தமிழ் படங்களில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார் .

முதன் முதலில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தார் .

முதல் படத்திலேயே ஓரளவுக்கு ரசிகர்களின் கவனத்தை கீர்த்தி சுரேஷுக்கு தொடர்ந்து அடுத்ததாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியது.

ரஜினி முருகன், தொடரி ,ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் ,சாமி 2 ,சண்டக்கோழி சீமராஜா, அண்ணாத்த, மாமன்னன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

தற்போது முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். கடைசியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் ரகு தாத்தா.

இந்த படத்திற்கு ரசிகர்களின் கலவையான விமர்சனங்கள் கிடைத்த வருகிறது. தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பாலிவுட்டில் என்ட்ரி:

கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட்டில் உருவாக்கி வரும் திரைப்படம் தான் பேபி ஜான் .

இந்த திரைப்படம் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் ஹிட் அடித்த தெறி திரைப்படத்தின் இந்தி ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தில் சமந்தா நடித்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதன் மூலம் அவர் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

இது அவர் நடிக்கும் முதல் ஹிந்தி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் சமூக வலைதளங்களில் வித்தியாசமாக உணவு சமைக்கிறேன் வித்தியாசமாக ஏதேனும் சமைக்கிறேன் எனக்கூறி வீடியோக்களை செய்து ட்ரைன் செய்து விடுகிறார்கள்.

ஐஸ்கிரீம் பஜ்ஜி:

அந்த வகையில் தற்போது ஐஸ்கிரீம் பஜ்ஜி செய்கிறேன் எனக்கூறி ஒருவர் ஐஸ்கிரீம் பஜ்ஜி செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக அதை பார்த்த கீர்த்தி சுரேஷ் அதற்கு ஷாக்கிங் ரியாக்ஷன் கொடுத்து Oh noo என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதை பார்த்த சில நெட்டிசன்ஸ் ” என்ன கருமம்டா இது? என கமெண்ட் செய்து விமர்சித்து வருகிறார்கள்..

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version