பொதுவாக சினிமா பிரபலங்கள் விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்துவது வாடிக்கையான ஒரு விஷயம். உள்ளாடைகள் ஆரம்பித்து தாங்கள் பயணிக்கக்கூடிய கார் மற்றும் வீடு என அனைத்தையுமே விலை உயர்ந்த பொருட்களை கொண்டே கட்டமைப்பது இயல்பு.
தற்போது தமிழில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்து இருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
தொடர்ந்து பட வாய்ப்புகளுக்காக முயற்சி செய்து வரும் இவர் கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருப்பதாக தன்னுடைய இணையப் பக்கங்கள் மூலமாக தூது விட்டு வருகிறார் ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று பாட்டுப் பாடி வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியில் இறங்கி கலக்க தயாராக இருக்கிறார்.
அதற்கு எடுத்துக்காட்டு இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்கள். அதுவும் தெலுங்கு திரைப்படங்கள் நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா மற்றும் நிதின் ரெட்டி நடிப்பில் வெளியான ரங்க்தே ஆகிய இரண்டு திரைப்படங்களிலும் நடிகை கீர்த்தி சுரேஷின் கவர்ச்சி எல்லை மீறி இருந்தது.
தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் நிலையில் விமான நிலையத்தில் வந்து புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷின் பேக்கை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி கிடக்கின்றனர்.
நடிகை கீர்த்தி சுரேஷ் இந்திய மதிப்பில் நான்கு லட்சம் ரூபாய் வரக்கூடிய ஒரு பேக்கை மாட்டிக்கொண்டு விமான நிலையத்திற்கு வந்திருந்தார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்களின் கண்களை இந்த பேக் கவனத்தை ஈர்த்தது.
இந்த பேக்கின் விலை இதுதான் என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மொத்தம் நான்கு லட்சம் ரூவாயா..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்.
பேக்-கின் விலை மட்டும் 31,500 HKD
இந்த பேக்கின் விலை மட்டும் 31,500 ஹாங்காங் டால்களாம். அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் கிட்ட தட்ட 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.
பேக்-ஐ மாட்டும் ஸ்ட்ராப் 9,400 HKD
இந்த பேக்-ஐ தோளில் மாட்ட வேண்டும் என்றால் அதற்கு தனியாக ஸ்ட்ராப் வாங்க வேண்டுமாம். இதனுடைய விலை 9,400 ஹாங்காங் டாலர்களாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்ட தட்ட 1 லட்சம் ரூபாய். ஆக மொத்தம் கீர்த்தி சுரேஷ் மாட்டியிருக்கும் பேக்கின் விலை 4 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்.
அப்படி என்னதான் அந்த பேக்கில் இருக்கப் போகிறது என்று தெரியவில்லை. எங்களுடைய சம்பளமே மாதத்திற்கு 15,000 தான். வருடம் முழுதும் வேலை செய்தால் கூட இந்த குட்டியான பேக்கை எங்களால் வாங்க முடியாது.
ஆனால் இந்த சம்பளத்தை வைத்து தான் எங்களுடைய குடும்பமே ஓடிக்கொண்டிருக்கிறது. எவ்வளவு மோசமான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று எண்ணத் தோன்றுகிறது என்று புலம்பி வருகின்றனர்.
அவருடைய பணம் அவர்கள் எதில் செலவு செய்யவேண்டும் எதில் செலவு செய்யக்கூடாது என முடிவெடுப்பது அவர்களுடைய உரிமை என்ற வகையில் இவர்கள் இதைது தான் பயன்படுத்த வேண்டும் இதனை பயன்படுத்த கூடாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்பதும் உண்மை என சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.