ஹிந்திக்கு போனதும் ஆளே மாறிட்டாங்க கீர்த்தி சுரேஷ்.. அதுக்குன்னு இப்படியா..? வாயை பிளந்த ரசிகர்கள்..!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட வாரிசு நடிகையான நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அபார திறமையை மகாநடி என்ற திரைப்படத்தில் காட்டியதை அடுத்து தேசிய விருதினை பெற்றவர்.

இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகனோடு இணைந்து நடித்ததை அடுத்து அறிமுகம் நாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்..

மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் தமிழில் கடைசியாக சைரன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தற்போது தமிழ் திரைப்படங்களான ரகு தாத்தா ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் திரைக்கு வர உள்ள நிலையில் உள்ளது.

இந்நிலையில் தென்னிந்திய படங்களில் நடித்திருக்க கூடிய கீர்த்தி சுரேஷ் தற்போதைய ஹிந்தியிலும் காலடி எடுத்து வைத்திருப்பதோடு பேபி ஜான் என்ற படத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளி வந்தது உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்.

தமிழில் இவர் நடிப்பில் வெளி வந்த ரஜினி முருகன் திரைப்படம் ஆனது இவருக்கு நல்ல ரிச்சை ரசிகர்கள் மத்தியில் பெற்று கொடுத்ததோடு சரளமாக மலையாள பெண்ணாக இருந்தாலும் தமிழ் பேசி அனைவரையும் அசத்துவார்.

மேலும் இவர் தளபதி விஜய்யுடன் பைரவா, விக்ரமுடன் சாமி 2, தனுசுடன் தொடரி, ரஜினியுடன் அண்ணாத்த போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டார்.

இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களோடு குறுகிய காலத்தில் நடித்திருந்தாலும் இவர் நடித்த படங்கள் பல வசூலை வாரி தராததை அடுத்து ராசியிலாத நடிகை என்ற முத்திரையை பெற்று விட்டார்.

ஹிந்திக்கு போனதும் ஆளே மாறிட்டாங்க..

இதனை அடுத்து தமிழில் அதிக அளவு திரைப்பட வாய்ப்புகள் இல்லாமல் போனதை அடுத்து கவர்ச்சியை கையில் எடுத்து புதிய புதிய புகைப்படங்களை தினம் தினம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு புதிய பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

அத்தோடு அக்கட தேசத்திற்கு சென்று டேரா போட்ட அவர் அங்கு பல படங்களில் நடிப்பு நல்ல பெயரையும் பெற்றதோடு தேசிய விருதையும் பெற்றதை அடுத்து இந்திய அளவில் பேசப்படும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

இதை அடுத்து மீண்டும் தமிழில் மாமன்னன் திரைப்படத்தின் மூலம் ரீஎன்றி கொடுத்த இவர் சைரன் படத்தில் சொதப்பியதை அடுத்து, அடுத்ததாக வெளிவரும் இவரது படமாவது இவருக்கு வெற்றியை கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அதுக்குன்னு இப்படியா? வாய்ப்பிளந்த ரசிகர்கள்..

இந்நிலையில் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி படத்திலும் நடிக்க ஆரம்பித்து இருக்கும் கீர்த்தி சுரேஷ் தெறி படத்தின் ரீமேக் காண பேபி ஜான் படத்தில் சமந்தா நடிக்க வேண்டிய ரோலில் நடிப்பதை அடுத்து இவரது சம்பளம் உயர்ந்து உள்ளதாக சொல்லப்படுகிறது.

இது வரை மூன்று கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்கி வந்த கீர்த்தி சுரேஷ் பேபி ஜான் படத்தில் நடித்த நான்கு முதல் ஐந்து கோடிகள் வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இதனை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் கீர்த்தி சுரேஷ் ஹிந்திக்கு போனதும் ஆளே மாறிட்டாங்க என்று சொல்லி இருப்பதோடு அவர்களது சம்பளத்தை நினைத்து வாய் பிளந்து விட்டார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயத்தை தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யவே இணையத்தில் அதிக அளவு படிக்கின்ற விஷயங்களில் ஒன்றாக மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version