தலை சுத்துதே.. முதல் முறையாக நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்.. பதறும் இளசுகள்..!

லட்சணமான முக ஜாடையோடு ஹோம்லியான கதாபாத்திரங்களுக்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக அறிமுகமாகி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மிக குறுகிய காலத்திலேயே இடத்தைப் பிடித்தவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கேரளாவை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர் பிறந்த வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான். இவரது தாய் மற்றும் பாட்டி உள்ளிட்டோர் கேரள சினிமாவில் பிரபல நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்கள்.

கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் பலவற்றில் நடித்திருக்கிறார்.

நடிகை கீர்த்தி சுரேஷ்:

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

தற்போது பாலிவுட் சினிமாவிலும் அடி எடுத்து வைத்திருக்கிறார். அங்கு இளம் ஹீரோவான வருண் தவானுக்கு ஜோடியாக அவர் புதிய படம் ஒன்றில் நடித்த வருகிறார் .

குழந்தை நட்சத்திரமாகவே மலையாள திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ் தொடர்ச்சியாக நடித்து வந்த அவர் தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த “இது என்ன மாயம்” திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் திரைப்படம் ஓரளவுக்கு அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. தொடர்ந்து அடுத்தடுத்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பாம்பு சட்டை, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், சாமி 2, சண்டக்கோழி ,சீமராஜா, அண்ணாத்த, மாமன்னன், உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்கள் நடித்த பிரபல நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கீர்த்தி சுரேஷின் திரைப்படங்கள்:

இதனிடையே அவர் தெலுங்கில் தொடர்ச்சியாக பல வெற்றி திரைப்படங்களில் நடித்த அங்கும் பிரபலமான நடிகை என்ற இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.

மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் இங்கு குறுகிய காலத்திலே மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆன இவர் தெலுங்கில் வெளிவந்த மகாநடி திரைப்படத்தில் சாவித்திரியின் கதாபாத்திரத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகையாக பார்க்கப்பட்டார் .

இத்திரைப்படம் இந்திய சினிமா அளவில் பெரும் புகழ்பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இந்திய சினிமாவில் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார் .

கவர்ச்சி காட்டாத கீர்த்தி சுரேஷ்:

நடிக்க வந்த புதிதில் ஹோம்லியான கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து நேர்த்தியான உடைகளை அணிந்து கவர்ச்சியே காட்டாமல் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ்.

பின்னர் நாட்கள் செல்ல செல்ல பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தில் தனது உடல் எடை ஒல்லியாக குறைத்து அதில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார் .

கிளாமரான ஆடைகளை கூட முகம் சுளிக்காமல் அணிந்து கொண்டு நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் குறித்த ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை தலை சுற்ற வைத்திருக்கிறது.

நீச்சல் உடையில் கீர்த்தி சுரேஷ்:

சினிமாவில் அறிமுகமான புதிதில் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று சொன்ன கீர்த்தி சுரேஷ் சமீப காலமாக திரைப்படங்களில் படுகிளாமாரான காட்சிகளில் நடித்து வருகிறார் .

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நீச்சல் குளத்தில் மூழ்கியவாறு தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் வெப் சீரிஸ் ஒன்றில் நீச்சல் உடைகள் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் என்ற தகவல் அறிந்து ரசிகர்கள் தலை சுத்துதே என்று கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

திரைப்படங்களில் ஹோம்லியாகவே பார்த்து ரசித்த கீர்த்தி சுரேஷா இப்படி? என அவரை திட்டி தீர்த்து விமர்சனம் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version