பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் சிறுவயதில் இருந்தே தன்னுடைய பங்களிப்பை சினிமாவில் கொடுத்திருக்கிறார். அவருடைய தயாரிப்பாளர் மற்றும் அவருடைய தாய் இருவரும் திரை பின்புலம் உள்ளவர்கள் என்பதால் இவருக்கு எளிதாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.
திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்த இவர் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான உடனே எனக்கு இஷ்டம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்த இவர் அதனை தொடர்ந்து 2002இல் குபேரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இந்த இரண்டு படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தில் ஹீரோயினாக கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.
இதனால் இவருடைய மார்க்கெட் எகிறியது. 2016ஆம் ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட நடிகையாக மாறிய இவர் தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமீபகாலமாக, இணையத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.